ஜீ தமிழில் புதியதாக களம் இறங்கவுள்ள சீரியல்களை புரமோட் செய்யும் விதமாக சேனல் குழு நடிகை சினேகா, சங்கீதா, சரண்யா பொன்வண்ணனை களத்தில் இறங்கியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுகிறது.
ஜீ தமிழில் ஜூலை 4 முதல் மாரி மற்றும் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற 2 சீரியல்கள் ஒளிப்பரப்பாகவுள்ளன. மாரி சீரியல் தெலுங்கு சீரியலின் ரீமேக் ஆகும். இந்த சீரியல் மூலம் திருமதி செல்வம் அர்ச்சனா சின்னத்திரையில் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார். அதே போல் பாரதி கண்ணம்மா புகழ் கண்மணி மனோகர் நடிக்கும் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் பல தடைகளை தாண்டி ஜூலை 4 முதல் ஜீ தமிழில் டெலிகாஸ்ட் ஆக உள்ளது.
மீண்டும் சீரியலில் நடிக்க போன குக் வித் கோமாளி பிரபலம்! யாருன்னு கெஸ் பண்ணுங்க!
இந்த 2 புதிய சீரியல்களை புரமோட் செய்யும் விதமாக நடிகைகள் சினேகா, சங்கீதா, சரண்யா பொன்வண்ணனை ஜீ தமிழ் களத்தில் இறக்கியுள்ளது. கதையின் ஒன்லைனை ரசிகர்களுக்கு மூவரும் சேர்ந்து சொல்வது போல் வீடியோவின் புரமோ அமைந்துள்ளது. கோவிலுக்கு போகும் மூவரும் மாரியை சந்திக்கின்றனர். அவருக்கு இருக்கும் அதிசயமான சக்தி பற்றி புரளி பேசுகின்றனர். இது மாரி சீரியல் புரமோ.
அதே போல் கோவில் குளத்தில் அமர்ந்தப்படி மூவரும் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இருக்கும் ட் விஸ்ட் பற்றி பேசுகின்றனர். தனது மகன் ஆசிரியர் இல்லை என தெரியாமல் அன்பை கொட்டும் அம்மா அன்னலட்சுமி, டீச்சரை தான் திருமணம் செய்வேன் என கொள்கையுடன் இருக்கும் அமுதா பற்றி சுருக்கமாக மூவரும் சொல்கின்றனர்.
சினேகா, சங்கீதா, சரண்யாவின் இந்த சீரியல் புரமோ வீடியோ ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. சின்னத்திரை சீரியல் பற்றி வெள்ளித்திரை நடிகைகள் வந்து பேசும் இந்த வித்தியாசமான புரமோஷன் இணையத்தில் சூப்பராக வொர்க்கவுட் ஆகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Saranya, Sneha, TV Serial, Zee tamil