Home /News /entertainment /

வித்யாவை கொல்ல நடக்கும் சதி - வித்யா நம்பர் 1 சீரியல் அப்டேட்!

வித்யாவை கொல்ல நடக்கும் சதி - வித்யா நம்பர் 1 சீரியல் அப்டேட்!

வித்யா நம்பர் 1 சீரியல் அப்டேட்

வித்யா நம்பர் 1 சீரியல் அப்டேட்

பல எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் ஸ்பெஷல் எபிசோட் வரும் ஞாயிறு மதியம் ஒளிபரப்பாக உள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ப்ரீத்தியுடன் திருமணத்திற்கு ஓகே சொல்லும் சஞ்சய், வித்யாவை கொல்ல நடக்கும் சதி, அதிரடியான திருப்பங்களுடன் வித்யா நம்பர் 1 சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வித்யா நம்பர் 1. பல எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் ஸ்பெஷல் எபிசோட் வரும் ஞாயிறு மதியம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த எபிசோட் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதாவது ப்ரஸ் மீட்டில் சஞ்சய், ப்ரீத்தி மற்றும் மானஸா திருமணம் குறித்து அறிவிக்கிறார் வேதா. இதனால் சஞ்சய்யின் அப்பா சஞ்சயிடம் உண்மையாகவே இந்த கல்யாணத்தில் விருப்பமா என கேட்க இதனை ஒட்டு கேட்கும் ப்ரீத்தி வேதாவிடம் இது குறித்து சொல்லி பிரச்சனையை பெருசாக்க எல்லோர் முன்னிலையிலும் வேதா உனக்கு கல்யாணத்தில் சம்மதமா என கேட்க உங்க முடிவு தான் என் முடிவு என சஞ்சய் சொல்கிறான்.

    அடுத்து சஞ்சய் மற்றும் வித்யா இருவரும் கோவில் ஒன்றுக்கு செல்ல அங்கு ஒரு யூ ட்யூப் சேனல் இருவருக்குமான புரிதலை அறிய தனித்தனியாக பேட்டி எடுத்து அதனை டிவியில் ஒளிபரப்பி விட இந்த விஷயம் வீட்டுக்கு தெரிய வர வேதா வித்யாவை வீட்டை விட்டு துரத்துகிறாள்.

    இதனால் கண் கலங்கியபடி வெளியேறும் வித்யா தனது வீட்டுக்கு போக முடிவு செய்ய திடீரேன மனம் மாறி தனது ஊருக்கு முன்னாடி இருக்கும் ஊரிலேயே இறங்கி விடுகிறாள். இந்த ஊரில் மழைக்காக வேண்டி கன்னி பெண் ஒருவரை வைத்து பரிகாரம் செய்ய முடிவு செய்கின்றனர். அந்த பரிகாரத்தை வித்யா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட இந்த நேரத்தில் ஜெயிலில் இருந்து தப்பித்து இங்கு வரும் ரஞ்சித் வித்யாவை கொல்ல திட்டம் போடுகிறான்.

    Also read... தள்ளிச் செல்கிறது பிசாசு-2 திரைப்படத்தின் வெளியீடு!

    மறுபக்கம் வித்யா இருக்கும் இடம் அறிந்து வீட்டில் வேண்டுதலை நிறைவேற்ற கோவிலுக்கு செல்வதாக சொல்ல வேதா ப்ரீத்தியை அழைத்து போக சொல்ல வேறு வழியில்லாமல் சஞ்சய் ப்ரீத்தியுடன் இந்த கோவிலுக்கு வருகிறான். சஞ்சய் செய்யும் கொலை முயற்சியில் இருந்து வித்யாவை காப்பாற்ற பிரபல நடிகர் ஒருவர் சிறப்பு வேடத்தில் என்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    யார் அந்த நடிகர்? வித்யாவை காப்பாற்றிய பிறகு சஞ்சய் என்ன செய்ய போகிறான்? கல்யாணத்தை எப்படி நிறுத்த போகிறான் என அதிரடியான திருப்பங்களுடன் வித்யா நம்பர் 1 சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி