Home /News /entertainment /

வித்யாவை காப்பாற்ற கருப்புசாமியாக வரும் பிரபல நடிகர் - வித்யா நம்பர் 1 சீரியல் அப்டேட்!

வித்யாவை காப்பாற்ற கருப்புசாமியாக வரும் பிரபல நடிகர் - வித்யா நம்பர் 1 சீரியல் அப்டேட்!

வித்யா நம்பர் 1 சீரியல்

வித்யா நம்பர் 1 சீரியல்

வித்யாவுக்கு வரும் ஆபத்திலிருந்து அவளை காப்பாற்ற கருப்பசாமியாக வரும் பிரபல நடிகர், வித்யா நம்பர் 1 சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வித்யா நம்பர் 1. வித்யாவும் சஞ்சயும் கொடுத்த பேட்டியால் வீட்டில் பிரச்சனை வெடிக்க வேதா வித்யாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பினாள்.

    வீட்டை விட்டு வெளியே வந்த வித்யா ஊருக்கு கிளம்பி போக திடீரென மனம் மாறி முன்னாள் இருக்கும் ஊரிலேயே இறங்கி அந்த ஊர் மக்கள் செய்யும் பூஜையில் முக்கியமான பரிகாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்.

    இதே ஊருக்கு வேறு விஷயமாக வரும் ரஞ்சித் இந்த திருவிழாவில் வைத்தே வித்யாவை தீர்த்து கட்ட முடிவு செய்து கலசத்தில் வெடிகுண்டு வைத்தது மட்டுமின்றி மலையேறும் வழியில் ரவுடிகளையும் தயார் செய்து வைக்கிறான். மிகப்பெரிய ஆபத்தில் இருந்து வித்யாவை காப்பாற்ற அந்த கருப்புசாமியே இறங்கி வருகிறார். கருப்புசாமியாக சிறப்பு வேடத்தில் பிரபல நடிகரான விக்னேஷ் நடிக்க உள்ளார்.

    Also read... பார்த்திபனை பிரிய கெடு வைக்கும் அனிதா... ரஜினி முடிவு என்ன? - ரஜினி சீரியல் அப்டேட்!

    வித்யாவை அழைத்து செல்ல இதே ஊருக்கு சஞ்சயும் வருகிறான். பிறகு சஞ்சய் திருவிழா முடிந்ததும் வித்யாவை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு அழைத்து சென்று தனது ரூமில் மறைத்து வைக்கிறான். பிறகு அம்மாவின் மனதை மாற்ற திட்டம் ஒன்றை தீட்டி உயிருக்கு ஆபத்தான விஷயத்தை செய்ய துணிகிறான். அது என்ன விஷயம்? அடுத்து நடக்கப் போவது என்ன? சஞ்சய் திட்டம் ஜெயிக்குமா? வேதா முடிவு என்ன? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி