Home /News /entertainment /

வித்யா நம்பர் 1 சீரியலில் இயக்குநர் பாக்கியராஜ்

வித்யா நம்பர் 1 சீரியலில் இயக்குநர் பாக்கியராஜ்

வித்யா நம்பர் 1 சீரியல்

வித்யா நம்பர் 1 சீரியல்

வித்யாவை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த சஞ்சய் காதலை புரிந்து கொண்டு வித்யாவை ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறாள் வித்யா.

  • News18
  • Last Updated :
    வித்யாவுக்கு என்னுடன் ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது என ரஞ்சித் எனும் வில்லன் வழக்கு தொடுக்க புதிய பிரச்சனை உருவாகியுள்ளது.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வித்யா நம்பர் 1. இந்த சீரியலில் வித்யாவை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த சஞ்சய் காதலை புரிந்து கொண்டு வித்யாவை ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறாள் வித்யா.

    வேதவல்லி ஊரில் இல்லாத போது income tax ரைடு வர சஞ்சய், வித்யா என இருவரும் ஒருவழியாக இந்த பிரச்சனையை சமாளித்த நிலையில் ஆரம்பத்தில் வித்யாவுக்கு ஒருவருடன் திருமணம் வரை சென்று அந்த கல்யாணம் நின்று போனது. இப்படியான நிலையில் அந்த நபர் ரஞ்சித் எனக்கும் வித்யாவுக்கும் ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது, என்னை ஏமாற்றி விட்டு இன்னொரு திருமணம் செய்து கொண்டார் என போலி சான்றிதழ்களுடன் கோர்ட்டில் வழக்கு தொடர வித்யாவுக்கு புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது.

    Also read... விபத்தில் சிக்கும் சூர்யா.. காப்பாற்ற துடிக்கும் மாரி.. நடக்கப்போவது என்ன? மாரி சீரியல் அப்டேட்

    வேதவல்லி இந்த பிரச்சனைக்கு நீயே தான் தீர்வு காண வேண்டும் என கை விரித்து விட வித்யா தனக்காக தானே வாதாட முடிவெடுக்கிறாள். இந்த வழக்கில் தனக்குத் தானே வாதாடி வித்யா எப்படி ஜெயிக்க போகிறாள் என்பது குறித்த காட்சிகள் வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாக உள்ளன. இந்த காட்சிகளில் நீதிபதியாக பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பாக்கியராஜ் அவர்கள் நடிக்க உள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. திரைக்கதை நாயகனான இவர் வித்யா நம்பர் 1 சீரியல் கதை பிடித்துப்போன காரணத்தினால் இந்த சீரியலில் சிறப்பு வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி