ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சீதா செய்யும் சாப்பாட்டில் விஷத்தை கலக்கும் சாவித்திரி - தவமாய் தவமிருந்து சீரியல் அப்டேட்

சீதா செய்யும் சாப்பாட்டில் விஷத்தை கலக்கும் சாவித்திரி - தவமாய் தவமிருந்து சீரியல் அப்டேட்

தவமாய் தவமிருந்து

தவமாய் தவமிருந்து

சீதா செய்யும் சாப்பாட்டில் விஷத்தை கலக்கும் சாவித்திரி, விஜய்க்கு வந்த ஆபத்து, நடக்க போவது என்ன? தவமாய் தவமிருந்து சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தவமாய் தவமிருந்து. வீட்டை மார்க்கண்டேயன் கோடு போட்டு பிரித்த நிலையில் அடுத்ததாக மார்க் கார் டிரைவராக ஒரு வேலையில் சேர முடிவெடுத்த நிலையில் இன்னொரு பக்கம் சீதா ராஜாவின் பாஸ் வீட்டில் விவரம் தெரியாமல் சமையல் வேலைக்கு செல்ல அங்கு அவரை எல்லா வேலையையும் செய்யுமாறு வற்புறுத்த எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வேலை செய்து வந்தாள்.

  இந்த நிலையில் பாஸ் ராஜாவின் குடும்பத்தை கூப்பிட்டு ட்ரீட் வைக்க அவர்களின் கண்ணில் வேலையாளாக சீதா பட இருவரும் சீதாவை ஏளனமாக பேசி சிரித்து வீட்டுக்கு வந்து விஷயத்தை சொல்லி கிண்டலடிக்க மார்க் உங்க அம்மா வேலைக்கு போனதை நினைச்சு நீ தான் வருத்தப்படணும். உன் முகத்தை நீயே கண்ணாடில பார்த்து காரி துப்பிக்க என திட்டினார்.

  இதனைத்தொடர்ந்து வரும் நாட்களில் சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரியவந்துள்ளது. அதாவது சாவித்திரி பாகற்காயில் போண்டா போட விஜய் மற்றும் ராஜா என இருவரும் நன்றாகவே இல்லை என சத்தம் போட மார்க் சீதாவின் சாப்பாட்டை புகழ்ந்து தள்ளி பேசி வெறுப்பேத்துகிறார்.

  இதனால் சாவித்திரி சீதாவை பழி வாங்க அவளுக்கு தெரியாமல் நாட்டு மருந்து கடையில் இருந்து விஷத்தை வாங்கி வந்து உணவில் கலந்து விடுகிறாள். பிறகு ஸ்கூலுக்கு போகும் விஜய் சீதாவிடம் வந்து இன்னைக்கு ஒரு நாள் ‌மட்டும் என் சாப்பாட்டை நீங்கள் சாப்பிடுங்கள், உங்க சாப்பாட்டை எனக்கு கொடுங்கள் என கேட்க சீதாவும் உணவை மாற்றி கொடுக்கிறாள்‌.

  பிறகு சாவித்திரி சீதாவுக்கு எதாவது நடக்கும் என ஆவலோடு காத்திருக்க மார்க் சாப்பாடு நீ சமைத்த மாதிரியே இல்லையே என பேசி கொண்டு சாப்பிட விஜய் வாந்தி எடுத்து மயங்கி விழ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக போன் வர எல்லோரும் பதற்றத்தோடு கிளம்பி செல்கின்றனர்.  குழந்தை கிரிட்டிக்கலான நிலையில் இருப்பதாக டாக்டர் சொல்கின்றனர். ராஜா சீதா தான் காரணம் என அவளை கொலைகாரி போல நடத்துகிறான்.

  Also read... ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாலேயே ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது - ஜி.எஸ்.டி. ஆணையர்

  பிறகு டாக்டர் சீதா மற்றும் மார்க்கை அழைத்து உணவில் விஷம் கலந்த விஷயத்தை சொல்ல அதிர்ச்சி அடையும் இவர்கள் வீட்டுக்கு போய் நடந்தது என்ன என அலச சாவித்திரி பையில் விஷ பாட்டில் இருப்பதை கண்டு பிடிக்கின்றனர். அடுத்து நடந்தது என்ன? ராஜா, சாவித்திரிக்கு மார்க் கொடுத்த தண்டனை என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv