Home /News /entertainment /

மார்க் திட்டத்தால் கைதாகும் ரேவதி - தவமாய் தவமிருந்து சீரியல் அப்டேட்!

மார்க் திட்டத்தால் கைதாகும் ரேவதி - தவமாய் தவமிருந்து சீரியல் அப்டேட்!

தவமாய் தவமிருந்து

தவமாய் தவமிருந்து

மார்க் திட்டத்தால் கைதாகும் ரேவதி, பரபரப்பான அடுத்த திருப்பங்களுடன் தவமாய் தவமிருந்து சீரியலின் இன்றைய எபிசோடு அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தவமாய் தவமிருந்து. பிள்ளைகளின் துரோகத்தால் மார்க் உடைந்து போய் உயிருக்கு போராடி மீண்டு வந்த நிலையில் வீட்டை கோடு போட்டு பிரித்தார்.

    இதனையடுத்து வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரேவதி வீட்டுக்கு வந்து வீட்டில் கோடு போட்டதை பார்த்து தனது அண்ணன்களை திட்டி நல்லவள் நாடகம் போடுகிறாள். பிறகு அப்பாவை அழைத்துக் கொண்டு தனியாக போய் இவ்வளவு பிரச்சனை எதுக்குப்பா? இந்த வீட்டை வித்துடுங்க. வித்து எனக்கான பங்கை எனக்கு குடுத்துடுங்க என சொல்ல அம்மாவோட நகையை வித்து கடனை அடைக்க போவதாக கூறுகிறார்.

    மேலும் என்னை புரிஞ்சுக்கிட்ட பொண்ணு நீதான். நீயும் என் கூட வாமா. நீதான் நல்ல விலைக்கு பேசி விற்று தரணும் என சொல்ல ரேவதி அதிர்ச்சி அடைகிறாள். நகையை மாற்றிய விஷயம் தெரிந்து விடுமோ என பயந்து எஸ்கேப் ஆக பார்க்க மார்க் ஒரு வழியாக ரேவதியை கடைக்கு கூட்டி சென்று நகையை விற்க நகைக்காரர் போலீஸ்க்கு தகவல் கொடுக்க ரேவதியை போலீசார் கைது செய்கின்றனர்.

    Also read... யமுனாவை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டார் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

    ரேவதியை போலீஸ் விசாரிக்க அவள் இதற்கெல்லாம் சீதா தான் காரணம், அவங்க தான் நகையை மாத்தி இருப்பாங்கனு பழியை தூக்கி போடுகிறாள். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? போலீஷின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என பரபரப்பான திருப்பங்களுடன் தவமாய் தவமிருந்து சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி