Home /News /entertainment /

மகனை அறைந்த மார்க்கண்டேயன்... உமாவின் வேலைக்கு வந்த சிக்கல்.. தவமாய் தவமிருந்து சீரியல் அப்டேட்

மகனை அறைந்த மார்க்கண்டேயன்... உமாவின் வேலைக்கு வந்த சிக்கல்.. தவமாய் தவமிருந்து சீரியல் அப்டேட்

தவமாய் தவமிருந்து சீரியல்

தவமாய் தவமிருந்து சீரியல்

ஆபிஸில் உமா ஒரு தவறு செய்துவிட மேனேஜர் அனைவர் முன்னிலையிலும் நிற்க வைத்து உமாவைத் திட்டுகிறார். இந்த நேரத்தில் அங்கு வந்த மார்க்கண்டேயன் ரூமுக்குள் வைத்து பேசலாமே என மருமகளுக்காக சிபாரிசு செய்து பேச அதுவே வினையாக மாறி உமாவை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
    மகன் ரவியை மார்கண்டேயன் அறைய இன்னொரு பக்கம் மருமகள் வேலை பறிபோகி உள்ளது.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தவமாய் தவமிருந்து. பசங்க சிவகுமார், அனிதா நாயர் எனப் பலர் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர்.

    தன் தம்பி மகன் திருமணம் நின்றுபோனதற்கு மலர்தான் காரணம் மாமானார் ரவியிடம் சண்டைபோட, அவரிடம் தன் தங்கைக்கு ஆதரவாக நின்று சண்டைபோடுகிறான் ரவி. வீட்டுக்கு வந்தவன் அதே கோபத்தில் அப்பா மார்க்கண்டேயனிடம் ‘’மலரால்தான் இவ்வளவும், உங்க வளர்ப்பு சரியில்லை’என்று மலரைப் பற்றி தவறான வார்த்தைகள் பேசிவிட கோபத்தில் மார்க்கண்டேயன் பளாரென மகன் ரவியை அடித்துவிடுகிறார். இதனால் தனது மனைவி உமாவை அழைத்துக்கொண்டு வெளியே சென்று விடுகிறான் ரவி.

    மார்க்கண்டேயனும், சீதாவும் தனது மகனையும் மருமகளையும் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவதற்காக கொட்டும் மழையில் சென்று காத்துக் கொண்டிருக்க ரவியும், உமாவும் மனம் மாறி மீண்டும் வீட்டிற்கு வருகின்றனர். இந்த சூழலில் மருமகள் உமா லன்ச் பாக்ஸை வீட்டில் மறந்துவிட்டு ஆபீசுக்கு கிளம்பி சென்று விடுகிறார்.

    ஆபிஸில் உமா ஒரு தவறு செய்துவிட மேனேஜர் அனைவர் முன்னிலையிலும் நிற்க வைத்து உமாவைத் திட்டுகிறார். இந்த நேரத்தில் அங்கு வந்த மார்க்கண்டேயன் ரூமுக்குள் வைத்து பேசலாமே என மருமகளுக்காக சிபாரிசு செய்து பேச அதுவே வினையாக மாறி உமாவை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்கின்றனர். இதனால் உமாவுக்கு மாமனார் மீது இன்னும் கோபம் அதிகமாகிறது.

    Also read... தற்கொலை முயற்சி செய்யும் மாரியின் தோழி... மாரி சீரியல் அப்டேட்!

    இதனால் மார்க்கண்டேயன் அடுத்து என்ன செய்யப்போகிறார், உமாவுக்கு மீண்டும் வேலை கிடைத்ததா இல்லையா? என விறுவிறுப்பான கட்டங்களுடன் அடுத்தடுத்த எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Zee Tamil Tv

    அடுத்த செய்தி