Home /News /entertainment /

செந்தில் வாத்தியார் இல்லை.. உண்மையை உடைத்த கோமதி, அதிர்ச்சியான அமுதா, சிதம்பரம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

செந்தில் வாத்தியார் இல்லை.. உண்மையை உடைத்த கோமதி, அதிர்ச்சியான அமுதா, சிதம்பரம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

நேற்றைய எபிசோடில் செந்தில் வாத்தியார் இல்லை என்ற சந்தேகம் கோமதிக்கு வந்ததை அடுத்து நேராக சிதம்பரம் வீட்டுக்கு வந்த அவர் நாகுவிடம் விஷயத்தை சொல்ல உடனே இளங்கோவை அழைத்துக் கொண்டு சென்று தன்னுடைய மாமனார் சிதம்பரத்திடம் இந்த விஷயத்தை கூறுகிறார். இதைக்கேட்டு அமுதா உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :
    செந்தில் வாத்தியார் இல்லை உண்மையை உடைத்த கோமதி, அதிர்ச்சியான அமுதா, சிதம்பரம் எடுத்த முடிவு.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.

    நேற்றைய எபிசோடில் செந்தில் வாத்தியார் இல்லை என்ற சந்தேகம் கோமதிக்கு வந்ததை அடுத்து நேராக சிதம்பரம் வீட்டுக்கு வந்த அவர் நாகுவிடம் விஷயத்தை சொல்ல உடனே இளங்கோவை அழைத்துக் கொண்டு சென்று தன்னுடைய மாமனார் சிதம்பரத்திடம் இந்த விஷயத்தை கூறுகிறார். இதைக்கேட்டு அமுதா உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

    உடனே சிதம்பரம் நான் இப்போவே ஸ்கூலுக்கு போன் பண்ணி உண்மை என்ன என்பதை கேட்கிறேன் என சொல்லி வீட்டுக்கு வந்து போன வாத்தியாருக்கு போன் செய்கிறார். செந்திலிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ள நிலையில் வாத்தியார் சிதம்பரத்திடம் செந்தில் பர்ஃபெக்ட்டான வாத்தியார். தற்போது அவருடைய போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கும். ஏனென்றால் அவர் பிள்ளைகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் என கூறுகிறார்.

    அதோடு இல்லாமல் செந்திலை ஸ்கேன் சென்டரில் பார்த்ததாக சொல்கிறார்கள் என கேட்க அதற்கும் செந்திலை பற்றி பாசிட்டிவாக கூறுகிறார் அந்த வாத்தியார். இதனை அடுத்து போனை கட் பண்ண சிதம்பரம் நாகு மற்றும் அவருடைய அம்மா கோமதியை திட்டியிருக்கிறார். நீங்க சம்பந்த வீட்டுக்காரரா போய்ட்டீங்கன்னு பார்க்கிறேன் வந்தம்மா சாப்பிட்டமா போனமானு இருக்கணும் என நாகுவையும் எச்சரிக்கிறார்.

    Also read... தாலியை அறுக்க வரும் கணவன்... பதறும் மீனாட்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

    இதனையடுத்து அமுதா தன்னுடைய தம்பியின் உதவியுடன் செந்திலுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதத்தில் கோமதி அம்மா உங்களைப் பற்றி சந்தேகத்தோடு சொன்னதும் நானும் அதை நம்பி விட்டேன். அதற்காக உங்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்கிறேன் என எழுதி இருக்க இதனை படித்து செந்தில் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார்.

    உடனே போனை எடுக்கும் செந்தில் அமுதாவுக்கு நான் உண்மையில் வாத்தியார் இல்லை என வாய்ஸ் மெசேஜ் செய்கிறார். அதன் பிறகு என்ன நடக்கப் போகிறது? அமுதா வாய்ஸ் மெசேஜை பார்த்து என்ன செய்யப் போகிறாள்? என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி