ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மூன்றரை மணி நேரம் ஒளிபரப்பாக போகும் சத்யா 2 சீரியல் கிளைமாக்ஸ் அப்டேட்!

மூன்றரை மணி நேரம் ஒளிபரப்பாக போகும் சத்யா 2 சீரியல் கிளைமாக்ஸ் அப்டேட்!

சத்யா 2 சீரியல்

சத்யா 2 சீரியல்

மூன்றரை மணி நேரம் ஒளிபரப்பாக போகும் சத்யா 2 சீரியலின் கிளைமாக்ஸ் எபிசோட் அப்டேட்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சத்யா 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இந்த வாரத்தோடு முடிவுக்கு வர உள்ளது.

  சத்யா 2 சீரியல் கிளைமாக்ஸ் வரும் அக்டோபர் 9-ம் தேதி 1 மணி முதல் 4.30 மணி வரை என மொத்தம் மூன்றரை மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது. மாரி ஆஷிகா, வித்யா 1 புவி, ரக்சிதா, திருமதி ஹிட்லர் ஹாசினி, விக்னேஷ் உள்ளிட்டோர் இந்த கிளைமாக்ஸ் எபிசோடில் சிறப்பு விருந்தினராக நடித்துள்ளனர்.

  அதாவது எலெக்ஷனில் பிரபு வெற்றி பெற அதை celebrate பண்ண அனைவரும் “நாங்க வேற மாறி” பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதோடு கிளைமாக்ஸ் எபிசோட் தொடங்கி பல விறுவிறு பரபர திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. எம் எல் ஏ சூழ்ச்சியை அறிந்து சத்யாவின் ஆளாக மாறு வேடத்தில் புவி என்ட்ரி கொடுக்கிறார்.

  பிறகு மாரிக்கு சத்யா உயிருக்கு ஆபத்து என தோன்ற, மாரி சத்யாவை காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறாள். அதே சமயம் இந்த பக்கம் ரோகன், எம்.எல்.ஏ கஜேந்திரன் சத்யாவை கொலை பண்ண திட்டம் போடுகிறார்கள்.

  பிறகு கொடியேற்ற பிரச்சினையில் ரக்ஷிதா என்ட்ரி கொடுக்க இருவருக்கும் திருவிழாவில் பாக்ஸிங் மேட்ச் நடக்கிறது. அடுத்து கொடியேற்றம் நடக்க, ஹாசினி (திருமதி ஹிட்லர் ஹீரோயின்) வர திருவிழா ஆரம்பமாகிறது.

  மேலும் விக்னேஷ் திருவிழாவுக்காக ஊர் கிணற்றில் இருந்து கம்பம் எடுத்து வர எம்.எல்.ஏ ஆட்கள் அதை தடுக்க நினைக்க சத்யா, விக்னேஷ்வர் சண்டை போட்டு அவர்களை அடிக்கின்றனர்.

  ரவுடிகள் மாக்கானை கடத்த, சத்யா ரவுடிகளை அடித்து யூனிபார்ம் போடுகிறாள். பின்னர் மாரி சத்யாவிடம் அவளது உயிருக்கு இருக்கும் ஆபத்தை சொல்கிறாள்.

  இதற்கிடையில் சத்யா தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை பிரபுவிடம் சொல்ல பிரபு ஹேப்பி. இந்த இடத்தில் நந்தா மாஸ்டர் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்து பாடல் ஒன்றுக்கு நடனமாட உள்ளார்.

  மேலும் ரோகன் திருவிழாவில் மூன்று இடத்தில் பாம் வைத்திருக்க சத்யா அதை எடுக்க முயற்சிக்கிறாள். அடுத்து தீ மிதிக்கும் இடத்தில் இருக்கும் பாம்-யை சத்யா எடுக்க, அம்மன் சிலை அருகில் பால் குடத்தில் இருக்கும் பாம்-யை ஹாசினி எடுக்க மூன்றாவது எங்கே என தேடுகின்றனர்.

  Also read... தமிழ் திரையுலகில் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் - நியூ அப்டேட்!

  எதிரிகளின் சூழ்ச்சிகளை சத்யா மொத்தமாக முறியடிக்க இதனால் அவளை கொல்ல திட்டம் போடுகின்றனர். அடுத்து நடக்கப் போவது என்ன? சத்யா இதில் இருந்து எப்படி தப்பிக்கிறாள்? கிளைமாக்ஸில் பலியாகும் அந்த ஒரு நபர் யார் என்ற பல ட்விஸ்டுகளோடு சீரியல் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாக உள்ளது.

  எனவே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், அதிரடி ஆக்சன் காட்சிகள் என அனைத்தும் கலந்த பக்கா மாஸ் என்ட்ர்டெய்ன்மென்ட்டாங ஒளிபரப்பாக உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv