ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சத்யாவை தேர்தலில் தோற்கடிக்க எம்.எல்.ஏ., செய்யும் சூழ்ச்சிகள் - சத்யா 2 சீரியல் அப்டேட்

சத்யாவை தேர்தலில் தோற்கடிக்க எம்.எல்.ஏ., செய்யும் சூழ்ச்சிகள் - சத்யா 2 சீரியல் அப்டேட்

சத்யா 2

சத்யா 2

சத்யாவை தேர்தலில் தோற்கடிக்க எம்.எல்.ஏ., செய்யும் சூழ்ச்சிகள், அடுத்து நடக்க போவது என்ன? சத்யா 2 சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சத்யா. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது கிளைமாக்ஸ்ஸை நெருங்கி வருகிறது.

  சத்யாவுக்காக பிரபு ஜெயிலுக்கு போன நிலையில் மீண்டும் பிட்னஸை நிரூபித்து போலீசான கையோடு பிரபுவை ஜெயிலில் இருந்து வெளியே எடுத்தாள். எம் எல் ஏ -க்கு எதிராக சத்யா தரப்பில் நிறுத்தப்பட்ட பெண் ஊரை விட்டு ஓடி விட அவளுக்கு பதிலாக பிரபுவை களத்தில் இறக்கி தானும் மெடிக்கல் லீவ் எடுத்து அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு ஓட்டு சேகரித்து வருகிறாள்.

  எம் எல் ஏ-க்கு செக் வைக்க ஓட்டுக்கு 10,000 ரூபாய் தரப்போவதாக கிளப்பி விட எம் எல் ஏ தரப்பு அதிர்ச்சி அடைகிறது. அடுத்து நடுக்குப்பம் மக்களுக்கு எம் எல் ஏ பணத்தை கொடுத்து சத்யா பணம் கொடுத்து ஓட்டு கேட்பதாக சித்தரிக்க ஊரின் பெரிய தலை விக்னேஷ் ஐயர் சத்யாவுக்கு ஆதரவு இல்லை என சொல்ல வைக்கிறார்.

  Also read... தெலுங்கில் சில்வர் ஜுப்லியாக அமைந்த கமல், ஸ்ரீதேவி ஜோடியின் கடைசிப் படம்

  அடுத்து சத்யாவுக்கு ஆதரவாக இருக்கும் மஜிலி குப்பம் ஏரியாவில் 20 ஆயிரம் ஓட்டுகளை லிஸ்ட்டில் இருந்து எம் எல் ஏ நீக்க வைக்க இதற்கு சத்யா எப்படி பதிலடி கொடுக்கிறார்? அடுத்து எம் எல் ஏ-க்கு எப்படி செக் வைக்கிறார் என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தெரிய வந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv