Home /News /entertainment /

பறி போன போலீஸ் வேலை... சத்யா எடுத்த சபதம் - சத்யா 2 சீரியல் அப்டேட்

பறி போன போலீஸ் வேலை... சத்யா எடுத்த சபதம் - சத்யா 2 சீரியல் அப்டேட்

 சத்யா 2

சத்யா 2

அநீதிகளை எதிர்த்து குரல் கொடுத்து வந்த சத்யா தனது அமுல் பேபியின் ஆசைக்காக கடுமையாக உழைத்து போலீசாகி நேர்மையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் எதிரிகளின் சூழ்ச்சியால் சத்யா அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பல தடைகளை தாண்டி உயிர் பிழைத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    போலீஸ் வேலை பறி போன நிலையில் அந்த உண்மை தெரிய வர சத்யா சபதம் ஒன்றை எடுக்கிறாள்‌.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சத்யா 2. முதல் சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

    அநீதிகளை எதிர்த்து குரல் கொடுத்து வந்த சத்யா தனது அமுல் பேபியின் ஆசைக்காக கடுமையாக உழைத்து போலீசாகி நேர்மையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் எதிரிகளின் சூழ்ச்சியால் சத்யா அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பல தடைகளை தாண்டி உயிர் பிழைத்துள்ளார்.

    Also read... ஹேப்பி பர்த்டே மகேஷ் பாபு: தெலுங்கின் சூப்பர் ஸ்டார் குடும்பத்தினருடன் இருக்கும் அரிய புகைப்படங்கள்

    மேலும் அவர் போலீஸ் வேலைக்கு பிட் இல்லை என மருத்துவர்கள் அறிக்கை கொடுத்ததால் அவரது வேலை பறி போனது. இந்த விஷயத்தை பிரபு சத்யாவுக்கு தெரியாமல் மூடி மறைத்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் சத்யாவுக்கு விஷயம் தெரிய வர அமுல் பேபியுடன் போலீஸ் அதிகாரியை சந்தித்து எந்த ரிப்போர்ட்டை வச்சு என் வேலையை பறிச்சீங்களோ அதே ரிப்போர்ட்டை பொய்யாக்கி திரும்பவும் அதே ஸ்டேஷன்ல வேலையில் உட்காருவேன் என சபதம் எடுக்கிறாள். இது குறித்த ப்ரோமோ வீடியோ வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, TV Serial, Zee tamil

    அடுத்த செய்தி