Home /News /entertainment /

பார்த்திபனை பிரிய கெடு வைக்கும் அனிதா... ரஜினி முடிவு என்ன? - ரஜினி சீரியல் அப்டேட்!

பார்த்திபனை பிரிய கெடு வைக்கும் அனிதா... ரஜினி முடிவு என்ன? - ரஜினி சீரியல் அப்டேட்!

ரஜினி சீரியல்

ரஜினி சீரியல்

ரஜினிக்கு எதிராக சதி செய்யும் சொந்த குடும்பம் அதே நேரத்தில் பார்த்திபனை பிரிய கெடு வைக்கும் அனிதா, ரஜினி சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரஜினி. இந்த சீரியலில் மாமனார், மாமியார் கேட்டு கொண்டதற்காக ஒரு நாள் மருமகளாக இருந்து கோவிலில் பரிகாரம் செய்ய பார்த்திபன் வீட்டுக்கு சென்றிருக்கிறாள் ரஜினி.

    வீட்டுக்கு போன ரஜினி பார்த்திபன் குடும்பத்துக்காக சமையல் செய்து பரிமாறி அனைவரிடமும் பாராட்டை பெறுகிறாள். மறுநாள் கோவிலில் மூன்று பரிகாரங்களை செய்ய வேண்டும் அதுவும் பரம்பரை நகையை அணிந்து கொண்டு தான் இவை அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதால் பார்த்திபன் அம்மா ரஜினியிடம் நகையை கொடுக்கிறார்.

    மறுநாள் கோவிலில் ரஜினி பூஜையை நல்ல படியாக செய்ய கூடாது என்பதற்காக அவளது அப்பாவும் சித்தப்பாவும் சிறு வெடிகுண்டு ஒன்றை வைக்கின்றனர். இன்னொரு பக்கம் ராதிகா சூழ்ச்சி செய்து பரம்பரை நகையை திருடி வேறொருவரின் பையில் வைத்து விடுகிறாள். நகை காணாமல் போனதால் குடும்பமே இதனை அபசகுணம் என நினைத்து அஞ்சுகின்றனர்.

    Also read... மம்மூட்டியின் நடிப்பில் ஹிட் அடித்த தமிழ் பாடல்கள் ஒரு லிஸ்ட்!

    இன்னொரு பக்கம் அனிதா ரஜினி எப்படி இந்த பூஜையை செய்து முடிக்கிறாள் என பார்க்கிறேன் என கணக்கு போட இதையெல்லாம் தாண்டி ரஜினி பரிகார பூஜையை எப்படி நல்லபடியாக செய்து முடிக்கிறாள் என்ற கோணத்தில் வரும் எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளன.

    அதோடு இல்லாமல் பார்த்திபன் பெற்றோர் மருமகளாக இங்கேயே இருக்க சொல்ல அதற்கு ரஜினி மறுப்பு சொல்ல அனிதா சவால் ஒன்றை விடுகிறாள். அது என்ன சவால்? அடுத்ததாக ரஜினி எடுக்க போகும் முடிவு என்ன? என பரபரப்பான திருப்பங்களுடன் ரஜினி சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி