முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாக்ஸிங்கில் பார்த்திபனை தோற்கடிக்க அனிதா செய்யும் சூழ்ச்சி - ரஜினி சீரியல் அப்டேட்!

பாக்ஸிங்கில் பார்த்திபனை தோற்கடிக்க அனிதா செய்யும் சூழ்ச்சி - ரஜினி சீரியல் அப்டேட்!

ரஜினி சீரியல்

ரஜினி சீரியல்

பாக்ஸிங்கில் பார்த்திபனை தோற்கடிக்க அனிதா செய்யும் சூழ்ச்சி, அரவிந்த் கொடுத்த அதிர்ச்சி என ரஜினி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரஜினி. இந்த சீரியலில் ரஜினியை பார்த்திபன் அத்தை மருமகளாக ஏற்று கொண்ட நிலையில் பார்த்திபன் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்க முடிவெடுக்கிறான்.

இதனையடுத்து வரும் நாட்களில் சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, அரவிந்த் ராதிகாவை டைவர்ஸ் பண்ண முடிவெடுக்க, பார்த்திபன், குபேரன் அதை தடுக்க நினைக்கின்றனர்.

மறுபக்கம் Selection match-ல் பாக்ஸர் பார்த்திபனை அடித்து வீழ்த்த, ட்ரீட்மெண்ட் எடுத்து விட்டு பார்த்திபன் வீட்டிற்கு வருகிறான். அனிதா வீட்டிற்கு வந்து என் தம்பிக்கு இப்படி ஆனதுக்கு நீதான் காரணம் என ரஜினியிடம் சண்டை போடுகிறாள்.

இதனால் பாக்ஸிங் கோச்சிங்காக ரஜினி பார்த்திபனை ஒரு ஸ்பெஷல் கோச்சிடம் அழைத்து செல்ல, ஒரு லேடி கோச்சாக டான்ஸ் ஜோடி டான்ஸ் நிஹாரிகா - தென்றல் என்ற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கிறார்.

மறுபுறம் ரேஷன் கார்டு விஷயத்தில் ரஞ்சிதம், பத்மா இருவருக்கும் சண்டை வருகிறது. ரஜினி இரண்டு பேரில் யாரை சமாதானம் செய்வது என தெரியாமல் முழிக்கிறாள்.

Also read... 'துண்டான நாசர் தலை பேசும்'.. புல்லரிச்ச சீன் அது.. 'தேவர் மகன்' க்ளைமேக்ஸ் ரகசியம் பகிர்ந்த கமல்!

அனிதா lady coach-யை கவர் செய்து விட்டதாக பார்த்திபனை நம்ப வைக்க, பார்த்திபன் அதை நம்பி கோச்சை தவறாக நினைக்கிறான். கோச் சொல்லும் எதையும் செய்யாமல் அதற்கு மாறாக நடந்து கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாக்ஸிங் மேட்ச்சில் பார்த்திபன் நிலை என்னவாகும்? கனவு நனவாகுமா? அனிதா சூழ்ச்சியால் நிராசையாகுமா என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv