Home /News /entertainment /

பார்த்திபனின் முகத்துக்கு நேராக சவால் விடும் ராதிகா - ரஜினி சீரியல் அப்டேட்!

பார்த்திபனின் முகத்துக்கு நேராக சவால் விடும் ராதிகா - ரஜினி சீரியல் அப்டேட்!

ரஜினி சீரியல்

ரஜினி சீரியல்

ரஜினி, பார்த்திபன் திருமணம் நடந்து முடிந்தை தொடர்ந்து பரபரப்பான திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    பார்த்திபனின் முகத்துக்கு நேராக சவால் விடும் ராதிகா, பரபரப்பான திருப்பங்களுடன் ரஜினி சீரியல்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரஜினி. இந்த சீரியல் ரஜினி, பார்த்திபன் திருமணம் நடந்து முடிந்தை தொடர்ந்து பரபரப்பான திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

    ரஜினி மற்றும் பார்த்திபனை பிரிக்கும் முயற்சியில் ராதிகா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறாள்‌. இப்படியான நிலையில் அடுத்ததாக பார்த்திபனுக்கு தெரியாமல் கடையில் ஜூஸில் போதை மாத்திரையை கலந்து கொடுக்கிறாள் ராதிகா. போதையில் பார்த்திபன் வீட்டுக்கு வர இதனால் வீட்டில் பெரும் பிரச்சனை வெடிக்கிறது.

    இதனை தொடர்ந்து பார்த்திபன் கடையில் தனக்கு ஜூஸ் கொடுத்தவரை அறைந்து நடந்தது என்ன என கேட்க ராதிகா ஜூஸில் போதை மாத்திரை கலந்த விஷயம் தெரிய வருகிறது. இதனால் பார்த்திபன் ராதிகாவை சந்தித்து இது பற்றி பேச ராதிகா நான் தான் பண்ணேன். உன்னையும் ரஜினியையும் வாழ விட மாட்டேன் என முகத்துக்கு நேராக சவால் விடுகிறாள்.

    Also read... கார்த்தி, வானதிக்கு வரும் விவாகரத்து நோட்டீஸ் - பேரன்பு சீரியல் அப்டேட்!

    அதோடு மட்டுமல்லாமல் தன்னை தானே தாக்கி கொண்டு அந்த பழியையும் பார்த்திபன் மீது போட முயற்சி செய்கிறாள். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? ராதிகாவின் வில்லத்தனம் வெல்லுமா? அல்லது ரஜினிக்கு உண்மைகள் தெரிய வருமா? அல்லது ரஜினி, பார்த்திபன் வாழ்க்கையில் மீண்டும் பூகம்பம் வெடிக்குமா? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி