Home /News /entertainment /

ராகவியின் தற்கொலை முயற்சிக்கு காரணமான முரளி - ரஜினி சீரியல் அப்டேட்

ராகவியின் தற்கொலை முயற்சிக்கு காரணமான முரளி - ரஜினி சீரியல் அப்டேட்

ரஜினி சீரியல் அப்டேட்

ரஜினி சீரியல் அப்டேட்

எதிர்பாராத விதமாக ரஜினியின் கழுத்தில் பார்த்திபன் தாலி கட்டிய நிலையில் தற்கொலைக்கு முயன்ற ராகவி கோமாவுக்கு போன நிலையில் மருத்துவமனையில் இருக்கிறாள்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ராகவியின் தற்கொலை முயற்சிக்கு காரணமான முரளி, ஆதாரங்களால் ரஜினி எடுக்க போகும் முடிவு என்ன ரஜினி சீரியல் அப்டேட்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரஜினி. திருமணத்தில் எதிர்பாராத விதமாக ரஜினியின் கழுத்தில் பார்த்திபன் தாலி கட்டிய நிலையில் தற்கொலைக்கு முயன்ற ராகவி கோமாவுக்கு போன நிலையில் மருத்துவமனையில் இருக்கிறாள்.

    ராகவிக்கு சுய நினைவு வந்தால் எல்லா உண்மைகளும் தெரிய வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுய நினைவு திரும்பி சில நிமிடங்களில் மீண்டும் கோமாவுக்கு சென்று விட்டாள். இப்படியான நிலையில் ராகவியின் தற்கொலை முயற்சிக்கு ரஜினியின் தம்பி முரளி தான் காரணம் என பார்த்திபனுக்கு தெரிய வருகிறது.

    Also read... பறி போன போலீஸ் வேலை... சத்யா எடுத்த சபதம் - சத்யா 2 சீரியல் அப்டேட்

    இதனால் கோபத்தோடு வீட்டுக்கு வரும் பார்த்திபன் முரளியை தாக்க பிறகு ரஜினி அவனை அடிக்க நீ யாருன்னு தடுக்க ராகவியின் தற்கொலை முயற்சிக்கு இவன் தான் காரணம், இவன் பண்ண தப்புக்கு நாம் பழி சுமந்துட்டு இருக்கோம் என ஆதாரங்களை காட்டுகிறான். இதனால் ரஜினிக்கு உண்மைகள் தெரிய வர அடுத்ததாக ரஜினி எடுக்க போகும் முடிவு என்ன என்ற கோணத்தில் இந்த வார எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி