Home /News /entertainment /

நிற்க போகுதா ஹரி, லட்சுமி கல்யாணம்? - புதுப்புது அர்த்தங்கள் சீரியல் அப்டேட்!

நிற்க போகுதா ஹரி, லட்சுமி கல்யாணம்? - புதுப்புது அர்த்தங்கள் சீரியல் அப்டேட்!

புதுப்புது அர்த்தங்கள்

புதுப்புது அர்த்தங்கள்

தாத்தாவுக்கு தெரிய வரும் உண்மை.. நிற்க போகுதா ஹரி, லட்சுமி கல்யாணம் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் அடுத்து நடக்கப் போவது என்ன. 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் புதுப்புது அர்த்தங்கள். ஆதிராவின் குழந்தைக்கு சந்தோஷ் தான் அப்பா என பிரதீபா பவித்ராவிடம் சொல்லி பூகம்பத்தை கிளப்ப இதனால் சந்தோஷ்க்கு DNA டெஸ்ட் எடுக்க அதில் சந்தோஷ் தான் குழந்தைக்கு அப்பா என தெரிய வந்தது.

    இதனால் அனைவரும் அதிர்ச்சியடைய ஹரி இதெல்லாம் பிரதீபாவின் சதி திட்டம் என சொல்லி எல்லோரையும் நம்ப வைத்து சந்தோஷை காப்பாற்றினார்.

    இதையடுத்து வரும் நாட்களில் சந்தோஷ் குறித்த உண்மை தாத்தாவுக்கு தெரிய வர அவர் பயங்கர கோபத்துடன் திருமணத்தை நிறுத்தி அனைவருக்கும் உண்மையை சொல்ல வருகிறார்.

    அந்த நேரத்தில் அவர் தவறி விழுந்து அடிபட்டு விட அவரை மருத்துவமனையில் சேர்த்து மயக்க நிலையிலேயே வைக்கிறான் சந்தோஷ்.

    Also read... புடவையில் நடிகை ஹினா கான் வெளியிட்ட கியூட் போட்டோஸ்!

    அடுத்து குழந்தையை தூக்கி தனது நண்பரிடம் கொடுக்க முயல ஹரி அதனை தடுத்து விடுகிறார். இதனால் ஹரிக்கு சந்தோஷ் மீது சந்தேகம் வருகிறது.

    மயக்க நிலையில் இருக்கும் தாத்தா எழுந்து வருவாரா? ஹரி, லட்சுமி கல்யாணம் நடக்குமா? அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி