Home /News /entertainment /

சந்தோஷ்க்கு எடுக்கப்படும் டி என் ஏ டெஸ்ட் - புதுப்புது அர்த்தங்கள் சீரியல் அப்டேட்

சந்தோஷ்க்கு எடுக்கப்படும் டி என் ஏ டெஸ்ட் - புதுப்புது அர்த்தங்கள் சீரியல் அப்டேட்

புதுப்புது அர்த்தங்கள் சீரியல்

புதுப்புது அர்த்தங்கள் சீரியல்

சந்தோஷ்க்கு எடுக்கப்படும் டி என் ஏ டெஸ்டால் மொத்த பேருக்கும் தெரிய வரும் உண்மை, பவித்ரா எடுக்க போகும் முடிவு என்ன புதுப்புது அர்த்தங்கள் சீரியல் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் புதுப்புது அர்த்தங்கள். சந்தோஷ் புரோக்கரை ஆஸ்பிடலுக்கு பார்க்க போன நிலையில் அவர் ஆதிரா குழந்தைக்கு நீ தான் அப்பா, உனக்கே தெரியாமல் உனது விந்தணு மூலம் உருவான குழந்தை தான் அது என ஆதாரங்களை கொடுக்க அவன் அதிர்ச்சி அடைந்தான்.

    இந்த பக்கம் பிரதீபா பவித்ராவிடம் உண்மையை சொல்லி டி என் ஏ டெஸ்ட் எடுக்க சொல்ல அவளும் டி என் ஏ டெஸ்ட் எடுத்து சந்தோஷ்க்கும் இதுக்கும் சம்மதம் இல்லை என நிரூபிக்கிறேன் என சவால் விட்டாள்.

    இதனையடுத்து வரும் நாட்களில் பவித்ரா டி என் ஏ டெஸ்ட் எடுக்க முயற்சி செய்ய முதலில் இதற்கு சந்தோஷ் மறுப்பு தெரிவிக்கும் நிலையில் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாமல் டெஸ்ட் எடுக்க ஒப்புக் கொள்கிறான்.

    Also read... Vendhu Thaninthathu Kaadu Movie Review: சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் விமர்சனம்!

    டெஸ்ட் முடிவில் அந்த குழந்தைக்கு அப்பா சந்தோஷ் தான் என தெரிய வருகிறது. இதனால் மொத்த குடும்பமும் உடைந்து போக சந்தோஷ் செய்வதறியாது தவிக்க பவித்ரா என்ன முடிவு எடுக்கப் போகிறாள்? சந்தோஷ் இந்த பிரச்சினையில் இருந்து எப்படி மீண்டு வர போகிறான் என்ற கோணத்தில் சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி