ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஹரி மீது போலீசில் புகார் அளிக்கும் லட்சுமி - புதுப்புது அர்த்தங்கள் சீரியல் அப்டேட்

ஹரி மீது போலீசில் புகார் அளிக்கும் லட்சுமி - புதுப்புது அர்த்தங்கள் சீரியல் அப்டேட்

புதுப்புது அர்த்தங்கள்

புதுப்புது அர்த்தங்கள்

ஹரி மீது போலீசில் புகார் அளிக்கும் லட்சுமி, துறவியால் தெரியவரும் உண்மை,புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் புதுப்புது அர்த்தங்கள். ஹரி மற்றும் லட்சுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் சந்தோஷ் குழந்தையை தன்னுடைய நண்பனிடம் கொடுக்கச் சென்ற நிலையில் அவனை பின் தொடர்ந்து சென்ற ஹரி சந்தோஷிடம் இருந்து குழந்தையை மீட்க முயற்சி செய்ய ஒரு கட்டத்தில் குழந்தை கை தவறி ஆற்றில் விழ இதனை லட்சுமி நேரில் பார்க்க ஹரி தான் குழந்தையை ஆற்றில் வீசியதாக தவறாக புரிந்து கொண்டு கல்யாணத்தை நிறுத்தி அவர் மீது போலீசில் புகார் அளிக்கிறார்.

    போலீசில் புகார் அளித்து ஒரு வாரம் ஆகியும் ஹரியை கைது செய்ய முடியாமல் லட்சுமி உடல் நிலை குழந்தையின் நினைப்பால் மோசமாக அவளை மனநல மருத்துவமனையில் சேர்த்து விடலாம் என பிரதீபா கூறுகிறார். பிறகு ஹரி லட்சுமி மருத்துவமனையில் பார்க்க அவர் ஓரளவு தேறி வருகிறார்.

    Also read... கர்நாடகாவில் பெரும் பிரச்சனையை சந்திக்கும் பொன்னியில் செல்வன் படம்!

    இதனால் ஹரியை தேடி கண்டுபிடிக்க சந்தோசம் முயற்சி செய்ய அது முடியாமல் போகிறது. பிறகு லட்சுமி துறவி வருவதை சந்திக்க அவர் குழந்தை உயிருடன் இருப்பதாக சொன்னதைக் கேட்டு சந்தோஷமாகும் அவள் குழந்தைக்காக கடினமான பரிகாரம் ஒன்று செய்ய தயாராகிறார். லட்சுமி இப்படி கஷ்டப்படுவதை பார்த்து சந்தோஷ் முக்கிய முடிவு ஒன்றை எடுக்கிறான்.

    இதனால் அடுத்து நடக்கப்போவது என்ன? குழந்தை மீண்டும் லட்சுமி கிடைக்குமா? ஹரி மற்றும் லட்சுமி கல்யாணம் நடக்குமா என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv