Home /News /entertainment /

சந்தோஷ்க்கு தெரிய வரும் மிகப்பெரிய உண்மை - புதுப்புது அர்த்தங்கள் சீரியல் அப்டேட்

சந்தோஷ்க்கு தெரிய வரும் மிகப்பெரிய உண்மை - புதுப்புது அர்த்தங்கள் சீரியல் அப்டேட்

புதுப்புது அர்த்தங்கள் சீரியல் அப்டேட்

புதுப்புது அர்த்தங்கள் சீரியல் அப்டேட்

தேவயானி, பார்வதி, அபிஷேக், நியாஸ் என பலர் இணைந்து நடித்து வரும் சீரியல் ஸ்பெஷல் எபிசோடை தொடர்ந்து பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாக உள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சந்தோஷ்க்கு தெரிய வரும் மிகப்பெரிய உண்மை, அடுத்து நடக்கப் போவது என்ன புதுப்புது அர்த்தங்கள் சீரியல் அப்டேட்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் புதுப்புது அர்த்தங்கள். தேவயானி, பார்வதி, அபிஷேக், நியாஸ் என பலர் இணைந்து நடித்து வரும் சீரியல் ஸ்பெஷல் எபிசோடை தொடர்ந்து பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாக உள்ளது.

    அதாவது ஜெயிலுக்கு போன ஹரி இந்த அபார்ட்மெண்ட்டில் இருக்க கூடாது என அனைவரும் பிரச்சனை செய்ய பார்வதி ஹரியை வீட்டுக்கு கூட்டி போக அப்போதும் பிரச்சனை தீராமல் இருக்க இருவருக்கும் கல்யாணம் என சந்தோஷ் எல்லோருக்கும் பத்திரிகை கொடுக்க ஹரி, லட்சுமி என இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

    Also read... நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய கார்த்தி

    இந்த கல்யாணம் வேண்டாம் என்று இருக்கும் லட்சுமி ஒரு கட்டத்தில் திருமணத்துக்கு ஓகே சொல்ல ஹரிக்கு சில கண்டிசன்களை போடுகிறாள். லட்சுமியின் நிபந்தனைகள் என்ன? அதனை ஹரி எப்படி ஏற்க போகிறார் என்ற கோணத்தில் வரும் நாட்களில் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

    அதுமட்டுமல்லாமல் இன்னொரு பக்கம் ஜெயிலில் இருந்து வெளியே வரும் பிரதீபா இந்த குழந்தைக்கு சந்தோஷ் தான் அப்பா என்பதை நிரூபிக்க ப்ரோக்கரிடம் பணம் கொடுத்து ஆதாரங்கள் கைப்பற்ற திட்டம் போட இந்த திட்டத்தில் எதிர்பாராத விதமாக சந்தோஷ் மற்றும் ப்ரோக்கருக்கு ஏற்படும் விபத்தில் இந்த ஆதாரங்கள் சந்தோஷ் கைக்கு செல்கிறது. இதனை சந்தோஷிடம் இருந்து பறிக்க பிரதீபா மீண்டும் திட்டம் போட நான் தான் அந்த குழந்தைக்கு அப்பா என்ற உண்மை சந்தோஷ்க்கு தெரிய வருகிறது.  இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? ஹரி, லட்சுமி கல்யாணம் நடக்குமா என பரபரப்பான அடுத்த திருப்பங்களுடன் புதுப்புது அர்த்தங்கள் சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி