Home /News /entertainment /

JK வீட்டு திருமணத்துக்கு செல்லும் வானதி - பேரன்பு சீரியல் அப்டேட்!

JK வீட்டு திருமணத்துக்கு செல்லும் வானதி - பேரன்பு சீரியல் அப்டேட்!

பேரன்பு சீரியல்

பேரன்பு சீரியல்

JK வீட்டு திருமணத்துக்கு செல்லும் வானதி, ஆர்த்தி செய்த சூழ்ச்சியால் வெடித்த புது பிரச்சனை பேரன்பு சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பேரன்பு. வானதி மற்றும் கார்த்தி என இருவரும் கோர்ட்டுக்கு போய் விட்டு அப்படியே பீச்சுக்கு செல்ல வானதி கடலுக்குள் மூழ்கி சங்கு எடுத்து வந்து கார்த்திக்கு பரிசளித்தாள். இதனையடுத்து வரும் நாட்களில் சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

    அதாவது வானதி எடுத்த சங்கை அடித்து உடைக்க முயற்சி செய்ய அதனை தடுத்து நிறுத்துகிறாள் வானதி. இதனைத்தொடர்ந்து Jk தனது மகனுக்கு திருமணம் என ராஜராஜேஸ்வரி வீட்டுக்கு பத்திரிகை எடுத்து வர அவர் செய்த துரோகத்தால் உள்ளே அழைக்க கூட விரும்பவில்லை.

    இதனையடுத்து JK நீங்க என்னை தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க, வானதியை கடத்தியதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, உங்களுக்கு உண்மை தெரியல என கூறுகிறார். ஆனாலாம் கார்த்தி உட்பட அனைவரும் அவனை துரோகி என திட்டி வெளியே அனுப்புகின்றனர்.

    அடுத்து வானதியுடன் ஆசிரமத்தில் இருந்த பெண் ஒருவர் வீட்டுக்கு வந்து எனக்கு கல்யாணம் நீ தான் என்னுடைய ஒரே பிரண்ட், கண்டிப்பாக கல்யாணத்துக்கு வரணும் என பத்திரிகை கொடுக்க இவள் தான் Jk மகனை கல்யாணம் செய்ய போகும் பெண் என்பதை ஆர்த்தியும் அமுதாவும் தெரிந்து கொண்டு திட்டம் போட்டு வானதியை அனுப்பி வைக்கிறார்கள்.

    Also read... மன்னன் ரஜினி கையில் இருக்கும் இந்த பிரபலம் யார் தெரிகிறதா?

    கல்யாணத்துக்கு போன வானதிக்கு JK வீட்டு திருமணம் என தெரிந்ததும் கார்த்திக்கு போன் போட்டு சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்ப JK ஒரு திட்டம் போட்டு வானதியை தாலி எடுத்து கொடுக்க வைக்க வீட்டில் அது பிரச்சனையாக மாறுகிறது. கார்த்தி கடும் கோபத்தில் இருக்க அடுத்து என்ன நடக்கப் போகிறது? ராஜராஜேஸ்வரி என்ன செய்ய போகிறாள்? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி