Home /News /entertainment /

விஷ்வா, வானதி மீது கார்த்திக்கு வரும் சந்தேகம் - பேரன்பு சீரியல் அப்டேட்

விஷ்வா, வானதி மீது கார்த்திக்கு வரும் சந்தேகம் - பேரன்பு சீரியல் அப்டேட்

பேரன்பு சீரியல்

பேரன்பு சீரியல்

விஷ்வா, வானதி மீது கார்த்திக்கு வரும் சந்தேகம் பேரன்பு சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பேரன்பு.
    கார்த்திக்கின் லேப்டாப் மீது வானதி தவறுதலாக தண்ணீர் ஊற்றி விட அதனால் இதுவரை வானதி மீது கோபப்படாமல் இருந்து வந்த ராஜ ராஜேஸ்வரியும் கோபப்பட்டு படிக்காதவள், முட்டாள் என திட்டி விட ஆர்த்தி மற்றும் அமுதா இருவரும் வானதியை மேலும் பயமுறுத்த வானதி வீட்டை விட்டு கிளம்பி வெளியே செல்ல தவறுதலாக தவறான தொழில் செய்யும் பெண்களிடம் சிக்கிக் கொள்ள கடைசியில் ராஜராஜேஸ்வரி நீண்ட தேடுதலுக்கு பிறகு வானதியை அவர்களிடம் இருந்து காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வந்தாள்.

    இதனையடுத்து வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஷ்வா, வானதிக்கு கார் கற்றுக் கொடுக்க அதை கார்த்திக் பார்க்கும் போது வானதியும், விஷ்வாவும் ஓரிடத்தில் இளநீர் குடித்துக் கொண்டிருக்கின்றனர். அதைக் கண்ட கார்த்திக் இருவரையும் சந்தேகப்படுகிறான்.

    இதனையடுத்து கார்த்திக்கும் அபிநயாவும் பைக்கில் சென்று கொண்டிருக்க அப்போது காரில் வரும் வானதி அவர்களை பின் தொடர்ந்து சென்று அவர்களை வழிமறித்து அபிநயாவின் துப்பட்டா பைக் வீலில் சிக்க உள்ளதை எச்சரித்துவிட்டு போகிறாள்.

    Also read... தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16 கிடையாது - எந்த தேதி தெரியுமா?

    மேலும் கார்த்திக்கையும் அபிநயாவையும் அமுதா சந்தேகப்பட அதில் எந்த உண்மையும் இல்லை என்பதை ராஜேஸ்வரி அமுதாவுக்கு விளக்குகிறாள்.

    அடுத்ததாக கார்த்திக்கும் வானதியும் கவுன்சிலிங் போக அங்கு இருவரும் தனித்தனி வாழ்க்கை வாழ போவதாக கூறுகின்றனர். அடுத்து கார்த்திக் வானதியை ரெஸ்டாரண்ட் கூட்டிட்டு போவது பிறகு பீச்சிற்கு கூட்டி போக கடலுக்குள் வானதி தொலைந்து போக கார்த்திக் பதட்டமாகி தேட வானதி கடலுக்குள் சங்கை எடுத்து வந்து கார்த்திக்கு பரிசளிக்கிறாள். இதனால் கார்த்தி ரியாக்ஷன் என்ன? வானதி காதலை புரிந்து ஏற்றுக் கொள்வானா என்ற கோணத்தில் வரும் நாட்களில் பேரன்பு சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி