Home /News /entertainment /

முதல் முறையாக வானதியை திட்டி அசிங்கப்படுத்திய ராஜராஜேஸ்வரி - பேரன்பு சீரியல் அப்டேட்!

முதல் முறையாக வானதியை திட்டி அசிங்கப்படுத்திய ராஜராஜேஸ்வரி - பேரன்பு சீரியல் அப்டேட்!

பேரன்பு சீரியல்

பேரன்பு சீரியல்

முதல் முறையாக ராஜராஜேஸ்வரி திட்டி அசிங்கப்படுத்தியதால் விபரீத முடிவெடுத்து பெரும் பிரச்சனையில் சிக்கிய வானதி, பரபரப்பான திருப்பங்களுடன் பேரன்பு சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பேரன்பு. மனைவி வானதியை பிடிக்காத புருஷன் கார்த்தி, மருமகளை மகளாக கவனித்து கொள்ளும் மாமியார் ராஜராஜேஸ்வரி இவர்களுக்கு இடையே நடப்பது என்ன? என்பதை மையமாக கொண்டு இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கார்த்தி பல கோடி ப்ராஜெக்ட் ஒன்றை எடுத்து அபிநயா என்ற பெண்ணை உதவியாளராக வைத்து கொண்டு வீட்டிலேயே பணியாற்றி வருகிறார்.

    இப்படியான நிலையில் வரும் நாட்களில் வானதி தவறுதலாக ப்ரஷன்டேஷன் வேலைகளை செய்து வைத்துள்ள லேப்டாப் மீது தவறுதலாக தண்ணீரை ஊற்றி விட அதை துடைக்க போக கடைசியில் லேப்டாப் மொத்தமாக பாழாகி விடுகிறது. இதனால் கார்த்தி வானதியை கண்டபடி திட்டி அசிங்கப்படுத்த ராஜராஜேஸ்வரியும் முதல் முறையாக இப்படியா நடந்துப்ப என வானதியை திட்ட அவள் மொத்தமாக நொறுங்கி போகிறாள்.

    இதனால் கார்த்தி அம்மாவுடன் சம்மந்தப்பட்ட ஆபிஸ்க்கு சென்று கால அவகாசம் கேட்க செல்ல இந்த பக்கம் வானதி இனியும் வீட்டில் இருக்க கூடாது என முடிவெடுத்து வெளியே கிளம்பி விடுகிறாள்.

    Also read... ப்ரீத்தியுடன் திருமணத்திற்கு ஓகே சொல்லும் சஞ்சய் - வித்யா நம்பர் 1 சீரியல் அப்டேட்!

    அலுவலகத்துக்கு சென்ற ராஜ ராஜேஸ்வரி அங்கு ஆபிஸ் தீ பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். ஒரு விதத்தில் வானதி நம்மை காப்பாற்றி இருக்கா என புரிந்து கொண்டு வீட்டிற்கு வர வானதி இல்லாததால் அதிர்ச்சி அடைகின்றனர். அவளை தேடி அலைகின்றனர்.

    வீட்டை விட்டு வெளியே வந்த வானதி எதிர்பாராத விதமாக விபச்சார கும்பலிடம் சிக்கி கொள்ள அடுத்து என்ன நடக்கப் போகிறது? வானதியை ராஜராஜேஸ்வரி எப்படி மீட்டெடுக்க போகிறாள்? கார்த்தியின் நடவடிக்கை என்ன என பரபரப்பான திருப்பங்களுடன் வரும் நாட்களில் பேரன்பு சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி