ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வானதி மீது கோவத்தில் இருக்கும் ராஜராஜேஸ்வரி - பேரன்பு சீரியல் அப்டேட்

வானதி மீது கோவத்தில் இருக்கும் ராஜராஜேஸ்வரி - பேரன்பு சீரியல் அப்டேட்

பேரன்பு சீரியல்

பேரன்பு சீரியல்

வானதி மீது கோவத்தில் இருக்கும் ராஜராஜேஸ்வரி, ஜீவா வழக்கில் நடந்த ட்விஸ்ட் பேரன்பு சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பேரன்பு. இந்த சீரியலில் வானதி கோர்ட்டில் உண்மையை உடைக்க ஜீவா கைது செய்யப்பட ராஜராஜேஸ்வரி வானதி மீது கோவத்தில் இருக்க வானதி பேச போக கார்த்தியின் அப்பா இப்போது வேண்டாம் என தடுத்து நிறுத்து விடுகிறார்.

  பிறகு வானதி சாமி கும்பிட்டு கொண்டிருக்க அப்போது ஆர்த்தியும் அமுதாவும் வானதியிடம் சண்டையிட ராஜராஜேஸ்வரி வந்து என் மகனை வெளியே கொண்டு வரணும், அதுக்காக கடவுளை வேண்டிக்கோங்க என சொல்லி வானதியின் முகத்தை கூட பார்க்காமல் சென்று விட வானதி வருத்தமடைகிறாள்.

  பின்னர் மறுநாள் ராஜராஜேஸ்வரி கோர்ட்டுக்கு போக அப்போது இந்த கேஸை சம்மந்தப்பட்டவர்களே வாபஸ் வாங்க ஜீவா விடுதலையாகிறான். கார்த்தியும் வானதியும் ஹாஸ்பிடலுக்கு சென்று அவர்களிடம் நடந்த விஷயத்துக்காக மன்னிப்பு கேட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தது தெரிய வருகிறது.

  தனது தவறை உணரும் ஜீவா நீங்கள் செய்தது தான் சரி என வானதியிடம் பேச ஆர்த்தி அவகிட்ட போய் என்ன மன்னிப்பு கேட்டுட்டு இருக்கீங்க என சத்தம் போட இப்ப நேரத்தில் கோர்ட்டில் இருந்து விவாகரத்து கேஸ் நோட்டீஸ் வர இதை வாங்கும் ஆர்த்தி வானதியை நக்கலாக பேசுவது மட்டுமின்றி கார்த்தியை தரக்குறைவாக பேச கார்த்தி ஆர்த்தி, வானதி என இருவரையும் அறைந்து விடுகிறான். ராஜராஜேஸ்வரி இதுக்கு பஞ்சாயத்து செய்து வைத்து பிரச்சனையை முடிக்கிறாள்.

  Also read... பூஜையுடன் தொடங்கியது கார்த்தியின் ஜப்பான் படம்!

  அடுத்து ஜீவா ஆபிஸ் போக கார்த்தி ஜீவாவுக்கு அனுபவமில்லாததால் சில விஷயங்களை சொல்ல அதை அபி வேறு மாதிரியாக கொளுத்தி போட இதனால் கோபமடையும் ஜீவா ஆபிஸில் கார்த்தியிடம் கடுமையான மோதலில் ஈடுபடுகிறான்‌. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv