Home /News /entertainment /

கார்த்தி, வானதிக்கு வரும் விவாகரத்து நோட்டீஸ் - பேரன்பு சீரியல் அப்டேட்!

கார்த்தி, வானதிக்கு வரும் விவாகரத்து நோட்டீஸ் - பேரன்பு சீரியல் அப்டேட்!

பேரன்பு சீரியல்

பேரன்பு சீரியல்

ஆசிரமத்தில் அனாதையாக தங்கிய வானதியை மகளாக தத்தெடுத்து வீட்டுக்கு அழைத்து வந்தாள் ராஜராஜேஸ்வரி.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    ஆர்த்தி செய்த சூழ்ச்சியால் கார்த்தி, வானதிக்கு வரும் விவாகரத்து நோட்டீஸ் அடுத்து நடக்க போவது என்ன பேரன்பு சீரியல் அப்டேட்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பேரன்பு. ஆசிரமத்தில் அனாதையாக தங்கிய வானதியை மகளாக தத்தெடுத்து வீட்டுக்கு அழைத்து வந்தாள் ராஜராஜேஸ்வரி.  இதனையடுத்து கார்த்தி ஒரு மீட்டிங்கிற்கு செல்ல அந்த மீட்டிங்கிற்கு வானதியை அழைத்து செல்ல சொல்ல வானதி கல்யாணத்துக்கு போவது போல பட்டு புடவை, நகை அணிந்து கொண்டு செல்கிறாள்‌.

    மீட்டிங்கிற்கு வந்த வானதி உடையை பார்த்து கார்த்தி எரிச்சலடைகிறான்‌. மேலும் பலரும் கேலி கிண்டல் செய்கின்றனர். சாப்பிடும் போது ஸ்டைலாக சாப்பிட தெரியாமல் உணவு கார்த்தி மீது தெறிக்கிறது.

    ஜேகேவின் சூழ்ச்சியால் வானதியை எல்லோரும் அசிங்கப்படுத்த கார்த்தி கம்பெனி பற்றி தவறாக பேச அங்கிருந்தவர்களிடம் பிரச்சனை செய்ய அவனுக்கு கையில் அடிபட்டு விடுகிறது. வீட்டுக்கு வந்த கார்த்தி அம்மாவிடம் நடந்ததை சொல்ல வானதி கதறி அழுகிறாள்.

    Also read... மாமனாருக்கு சவால் விடும் பொம்மி - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்

    இது ஒருபுறமிருக்க ஆர்த்தி ராஜராஜேஸ்வரி ரூம் கபோர்டில் இருந்து இருவரிடமும் கையெழுத்து வாங்கிய விவாகரத்து பேப்பரை எடுத்து வழக்கறிஞரிடம் கொடுத்து கோர்ட்டில் கேஸ் போட சொல்கிறாள்.  இதனால் கார்த்தி வானதிக்கு கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வர கார்த்தி அம்மா தான் இப்படி பண்ணி இருக்காங்க என நினைத்து கொள்கிறான்.

    இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? கோர்ட்டில் கார்த்தி, வானதி விவாகரத்து கேஸில் என்ன தீர்ப்பு வர போகிறது என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி