Home /News /entertainment /

கணவனின் பேச்சை மீறி செயல்படுவாளா வானதி? பேரன்பு சீரியல் அப்டேட்ஸ்

கணவனின் பேச்சை மீறி செயல்படுவாளா வானதி? பேரன்பு சீரியல் அப்டேட்ஸ்

பேரன்பு சீரியல்

பேரன்பு சீரியல்

சுந்தரமூர்த்தி வானதி காலில் விழுந்து ஆர்த்தியை சேர்த்து வைக்க கெஞ்ச வானதி, ஆர்த்தியின் எதிர்கால நலனுக்காக நான் சேர்த்து வைக்கிறேன் என வாக்கு கொடுக்கிறாள். ஜீவாவும் வானதியை சந்தித்து நடந்ததை கூறி எங்களை சேர்த்து வையுங்கள் என கெஞ்சுகிறான்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
    ஜீவா, மானசா திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் வானதியால் கார்த்திக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டுள்ளது.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பேரன்பு. அமுதா செய்த துரோகத்தால் வானதி, ஆர்த்தி, அமுதா என எல்லோரையும் வீட்டை விட்டு துரத்துகிறான் ஹீரோ கார்த்திக். ஜீவாவுக்கும் அவன் விரும்பும் மானஸாவுக்கும் திருமணம் செய்து வைக்க கார்த்திக் ஏற்பாடுகள் செய்ய எதிர்பாராத திருப்பமாக மாமியார் ராஜராஜேஷ்வரி கத்திக்குத்தில் இருந்து காப்பாற்றுகிறாள் மருமகள் வானதி. இதனால் வானதியை மீண்டும் வீட்டுக்குள் அழைத்துவரும் ராஜேஷ்வரிக்கு தன் மகள் ஆர்த்தியையும் வீட்டுக்குள் சேர்க்க வேண்டும் என நெருக்கடி கொடுக்கிறாள் அமுதா.

    ஆர்த்தி தனது காதல் பற்றி உருக்கமாக பேச மனம் மாறிய ஜீவா ஆர்த்தியுடன் உடல் ரீதியாக சேர்ந்து விடுகிறான். இந்த விஷயம் சுந்தரமூர்த்திக்கு தெரிய வர வானதி காலில் விழுந்து ஆர்த்தியை சேர்த்து வைக்க கெஞ்ச வானதி, ஆர்த்தியின் எதிர்கால நலனுக்காக நான் சேர்த்து வைக்கிறேன் என வாக்கு கொடுக்கிறாள். ஜீவாவும் வானதியை சந்தித்து நடந்ததை கூறி எங்களை சேர்த்து வையுங்கள் என கெஞ்சுகிறான்.

    Also read... மித்ரா - வினய் காதல் வாழ்க்கைக்குள் குறுக்கிடும் தீபிகா - தெய்வம் தந்த பூவே சீரியல் அப்டேட்

    கார்த்திக்கின் முயற்சியால் ஜீவா, மானஸா திருமண மேடை வரை செல்ல வானதி என்ன செய்யப் போகிறாள்? ராஜராஜேஷ்வரி எடுக்கப்போகும் முடிவு என்ன? ஜீவா, ஆர்த்தி ஒன்று சேர்வார்களா என்ற கோணத்தில் வரும் எபிசோடுகள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி