முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நினைத்தாலே இனிக்கும் சீரியலில் ஸ்பெஷல் கெஸ்ட்டாக வரும் குழந்தை நட்சத்திரம்!

நினைத்தாலே இனிக்கும் சீரியலில் ஸ்பெஷல் கெஸ்ட்டாக வரும் குழந்தை நட்சத்திரம்!

நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும் சீரியலில் ஸ்பெஷல் கெஸ்ட்டாக வரும் குழந்தை நட்சத்திரம், யார் அவர்? என்ன ரோல் தெரியுமா? சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நினைத்தாலே இனிக்கும். தமன்னாவுக்கும் மனோவுக்கும் எதிர்பாராத விதமாக திருமணம் நடந்ததை தொடர்ந்து வீட்டில் கொலு வைக்கும் போட்டி நடைபெற்று வருகிறது. தமன்னா மற்றும் பொம்மி இடையே பல போட்டிகள் நடந்து வருகிறது.

முதலாவதாத அழகான கொலு வைப்பது யாரு என்ற போட்டி நடந்தது. இரண்டாவதாக இருவருக்கும் பாட்டு போட்டி நடக்க மால்குடி சுபா சிறப்பு விருந்தினராக பங்கேற்க அடுத்து நடன போட்டிக்காக நந்தா மாஸ்டர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக கோவிலில் பிரசாதம் செய்யும் போட்டி நடக்க பொம்மி, தமன்னா என இருவரும் பிரசாதம் செய்ய சிறுவன் ஒருவன் பொம்மியிடம் வந்து ரொம்ப பசிக்குது என கேட்க அவள் செய்த பிரசாதத்தை எடுத்து கொடுத்து விட்டு போட்டியில் இருந்து விலகுவதாக சொல்ல அவளிடம் காரணம் கேட்கின்றனர்.

இதனால் பொம்மி சாமிக்கு படைக்கும் பிரசாதத்தை எச்சில் படாமல் சமைக்க வேண்டும். ஆனால் ஒரு சிறுவன் தன்னிடம் வந்து பசிக்குது என கேட்டதால் பிரசாதத்தை அந்த சிறுவனுக்கு கொடுத்து விட்டதாக சொல்கிறாள்.

இதனால் தமன்னா வெற்றி நமக்கு தான் என சந்தோஷப்பட கடைசியில் பூசாரி இந்த கோவில் ஐதீகம் அது தான். யார் பக்தியோட இருந்து பிரசாதம் செய்கிறார்களோ அவர்களிடம் அந்த சாமியே குழந்தையாக தோன்றி பிரசாதம் வாங்கி சாப்பிடும் என பொம்மியை வெற்றியாளராக அறிவிப்பார்கள் என தெரிய வந்துள்ளது.

Also read... நாலு மொழி... நாலு ஹிட்... துல்கருக்கு முன்பே சாதனை படைத்த தமிழ் நடிகர்

இதில் கடவுளாக வரும் குழந்தை வேடத்தில் தான் ஸ்பெஷல் கெஸ்ட்டாக குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.  விரைவில் இந்த காட்சிகள் சீரியலில் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv