Home /News /entertainment /

பொம்மிக்கும் தமன்னாவுக்கும் நடக்கும் நவராத்திரி கொலு போட்டி - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்!

பொம்மிக்கும் தமன்னாவுக்கும் நடக்கும் நவராத்திரி கொலு போட்டி - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்!

நினைத்தாலே இனிக்கும் சீரியல்

நினைத்தாலே இனிக்கும் சீரியல்

பொம்மிக்கும் தமன்னாவுக்கும் நடக்கும் நவராத்திரி கொலு போட்டியில் ஜெயிக்க போவது யார் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நினைத்தாலே இனிக்கும். வினய் தமன்னா திருமணத்தை நடத்த பத்மநாபன் திட்டமிட்ட நிலையில் சித்தார்த் பொம்மி முயற்சியால்  மேனகாவுடன் திருமணம் நடந்தது. இதனால் அஞ்சலி குடும்பத்து மருமகளாக முடியாத கோபத்தில் இருந்த தமன்னாவை தனது இரண்டாவது மனைவியின் மகனுக்கும் திருமணம் நடந்தது.

    சாதாரண மெக்கானிக்கான மனோவை ஆட்டோ மொபைல் என்ஜீனியர் என பொய் சொல்லி விடுகிறார் பத்மநாபன். ஒரு கட்டத்தில் இதுவும் தமன்னாவுக்கு தெரிய வந்தது. மேலும் மனோ இனி இந்த வீட்டில் இருந்து ஒவ்வொருவரையா வெளியே அனுப்புறேன் என சத்தியம் செய்தான். இன்னொரு பக்கம் தமன்னா உங்க எல்லாரையும் வீட்டை விட்டு ஓட விடுறேன் என பொம்மியிடம் சவால் விடுகிறாள்.

    இப்படியான நிலையில் அடுத்ததாக தமன்னா மற்றும் மனோவுக்கு சித்தார்த் ரூமில் முதலிரவு ஏற்பாடுகள் நடக்க இவர்கள் மொட்டை மாடியில் படுத்து தூங்குகின்றனர்.  சித்தார்த் தூக்கத்தில் உருண்டு பொம்மி மடியில் படுத்து தூங்க இருவருக்கும் இடையே ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

    Also read... மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாரதிராஜா

    அடுத்ததாக வீட்டில் நவராத்திரி பூஜைக்கு ஏற்பாடுகள் செய்ய யார் கொலுவை அழகாக வைக்கிறார்கள் என தமன்னா மற்றும் பொம்மிக்கு போட்டி நடைபெற உள்ளது. இதில் ஜெயிக்க போவது யார் என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி