ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொம்மி, தமன்னாவுக்கு கடுமையான போட்டி வைக்கும் தெய்வநாயகம் - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்

பொம்மி, தமன்னாவுக்கு கடுமையான போட்டி வைக்கும் தெய்வநாயகம் - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்

நினைத்தாலே இனிக்கும் சீரியல்

நினைத்தாலே இனிக்கும் சீரியல்

பொம்மி, தமன்னாவுக்கு கடுமையான போட்டி வைக்கும் தெய்வநாயகம், தமன்னா செய்யும் சூழ்ச்சியால் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் அடுத்து நடக்க போவது என்ன.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நினைத்தாலே இனிக்கும். பொம்மி மற்றும் தமன்னா என இருவருக்கும் இடையே நவராத்திரி கொலு போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் இறுதியாக நாடகப்போட்டி நடந்து முடிந்தது.

    இதனைத்தொடர்ந்து அடுத்து வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது தாத்தா தெய்வ நாயகம் அவர்கள் இருவருக்கும் புது போட்டியை கூறுகிறார்.

    அதாவது இருவரும் வீட்டில் வைத்த கலசத்தை எடுத்து கொண்டு வேறு வேறு வழிகளில் கோவிலுக்கு செல்ல வேண்டும், முதலில் கோவிலுக்கு வருபவர் கையில் விளக்குடன் குளத்தில் மூன்று முறை மூழ்கி எழுந்து வந்து 108 விளக்குகளை ஏற்றி விட்டு பிறகு காட்டுக்கு சென்று வனபத்திரகாளி கோவிலுக்கு சென்று தீப்பந்தம் எடுத்து வந்து தீ மிதித்து கொலசை கொளுத்த வேண்டும் என சொல்கிறார்.

    Also read... பிக்பாஸ் வீட்டில் ஒரு டீ-க்கு இவ்வளவு பிரச்னையா - வெளியானது கலேபர ப்ரோமோ!

    பிறகு இருவரும் கோவிலுக்கு கலசத்துடன் கிளம்ப வழக்கம் போல பொம்மிக்கு எதிராக சில சதி வேலைகளை செய்ய அதையெல்லாம் மீறி இருவரும் ஒரே நேரத்தில் கோவிலுக்கு வருகின்றனர். பிறகு குளத்தில் மூழ்கும் போது பொம்மியை ஒருவர் நீருக்குள் இருந்து காலை இழுக்க அதிலிருந்து மீண்டு எப்படி வருகிறாள்? பின்னர் மனோ செய்த சதியால் தமன்னா வேக வேகமாக விளக்கை ஏற்றி விட அடுத்து நடக்கப் போவது என்ன? இந்த போட்டியில் பொம்மி எப்படி ஜெயிப்பாள் என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv