ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

யார் அந்த மீரா? சித்தார்த் வாழ்க்கையில் நடந்தது என்ன? - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்

யார் அந்த மீரா? சித்தார்த் வாழ்க்கையில் நடந்தது என்ன? - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்

நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்

யார் அந்த மீரா? சித்தார்த் வாழ்க்கையில் நடந்தது என்ன? நினைத்தாலே இனிக்கும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நினைத்தாலே இனிக்கும். சித்தார்த் பொம்மியிடம் சண்டை போட்டு விட்டு மயங்கி விழ பிறகு அவனை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவன் மீரா மீரா என புலம்புகிறான். இதனால் குழப்பமாகும் பொம்மி மீரா யார் என அறிந்து கொள்ள சித்தார்த் டைரியை படிக்க தொடங்குகிறாள்.

    இன்னொரு பக்கம் தமன்னா இனி நீ இங்கே இருக்க மாட்ட என கிண்டல் அடிக்கிறாள். தொடர்ந்து பொம்மி யாருக்கும் தெரியாமல் டைரியை எடுத்து படிக்கிறாள்.

    சித்தார்த் தோழி ப்ளாஷ்பேக்கில் ஸ்வேதா அவள் நம்பரை வாங்கி அவலை டிரேஸ் செய்யபோவதாக சொல்கிறாள். மீரா சித்தார்த்திற்கு போன் செய்து பார்க்கிற்கு அழைத்து போனில் ஐ லவ் யூ என சொல்ல சித்தார்த் அவள் யார் என்பதை கண்டு பிடிக்க தேடி அலைகிறான்.

    டைரியை படித்து கொண்டிருக்கும் பொம்மியை தாத்தா கூப்பிட்டதால் பொம்மி டைரியை மூடி வைத்து , மீரா பாடிய பாடலை பாடியபடி போகிறாள். சித்தார்த் அதை கேட்டு பீல் ஆகிறான். பொம்மி அதை பார்த்து மீண்டும் டைரியை படிக்க ஆரம்பிக்கிறாள்.

    Also read... 40 வருடங்களுக்கு முன்பே இந்தியில் மாஸ் காட்டிய கமல் படம்!

    மீண்டும் ஃப்ளாஷ் பேக்கில் ஸ்வேதா சித்தார்த்திடம் காதலர் தினத்தன்று தன் காதலை சொல்ல சித்தார்த் அவளை லூசா என திட்டி விடுகிறான். அவள் பின் மீரா கால் செய்ய ஸ்வேதா தான் மீரா என ரிவில் ஆகிறது, ஆனால் இது தெரியாமல் சித்தார்த் அவளை தேடுகிறான். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? சுவேதா தான் மீரா என தெரிய வந்தாள் என்ன நடக்கும்? என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv