ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொம்மியின் முயற்சிகளை முறியடிக்கும் தமன்னா - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்

பொம்மியின் முயற்சிகளை முறியடிக்கும் தமன்னா - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்

நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்

பொம்மியின் முயற்சிகளை முறியடிக்கும் தமன்னா, அடுத்தடுத்து நடக்கும் சதி வேலைகள் என நினைத்தாலே இனிக்கும் சீரியலில் இன்றைய எபிடோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நினைத்தாலே இனிக்கும். இந்த சீரியலில் பொம்மி சித்தார்த்தின் மனதை மாற்ற அவனது காலேஜ் நண்பர்களை வீட்டுக்கு வர வைத்திருந்த நிலையில் அவர்களில் ஒருவனுக்கு தமன்னா பணத்தை கொடுத்து தன்பக்கம் இழுத்து சித்தார்த்திடம் திரும்ப திரும்ப ஸ்வேதா நினைப்பை கொண்டு வர செய்ய அவனும் அப்படியே நடந்து கொள்ள சித்தார்த் தனது நண்பர்களை திட்டி வெளியே துரத்தி விடுகிறான்.

    இப்படியான நிலையில் அடுத்ததாக பொம்மி நேராக ஸ்வேதாவின் வீட்டிற்கு சென்று அவளிடம் படித்தவள் என பொய் சொல்லி வீட்டிற்குள் சென்று பேச தமன்னா அவர்களுக்கு போன் போட்டு பொம்மி சித்தார்த் மனைவி என்ற விஷயத்தை சொல்ல அவர்கள் பொம்மியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகின்றனர். இருப்பினும் பொம்மி அங்கேயே இருந்து மயக்கம் போட்டு விழுந்து விட பிறகு அவர்கள் பொம்மியை காப்பாற்ற பொம்மி அவர்களிடம் சித்தார்த் பற்றிய உண்மையை சொல்கிறாள்.

    Also read... 'சொல்ல சொன்னாங்க.. சொன்னேன்..' நடிகை ஆடை சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த சதீஷ்!

    இதனால் சித்தார்த்தை மன்னித்து விட முடிவு செய்து ரெஸ்டாரன்ட் ஒன்றுக்கு அழைத்து வர சொல்ல பொம்மி மீரா போல பேசி அந்த இடத்திற்கு வர வைக்க பொம்மியின் இந்த முயற்சியும் தமன்னாவின் சதியால் முறியடிக்கப்படுகிறது. அப்படி தமன்னா செய்தது என்ன? பொம்மி அடுத்து என்ன செய்யப் போகிறாள்? என்ற கோணத்தில் சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv