ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சித்தார்த் வாழ்க்கை ரகசியத்தை தாத்தாவிடம் சொல்லும் பொம்மி - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்

சித்தார்த் வாழ்க்கை ரகசியத்தை தாத்தாவிடம் சொல்லும் பொம்மி - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்

நினைத்தாலே இனிக்கும் சீரியல்

நினைத்தாலே இனிக்கும் சீரியல்

சித்தார்த் வாழ்க்கை ரகசியத்தை தாத்தாவிடம் சொல்லும் பொம்மி, தமன்னா செய்யும் சதி திட்டம், நினைத்தாலே இனிக்கும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நினைத்தாலே இனிக்கும். டைரியை படித்து சித்தார்த் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பொம்மி தெரிந்து கொண்ட நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

  அதாவது பொம்மி டைரியை தாத்தாவிடம் கொடுத்து அவனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்ல அவர் இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். மேலும் பொம்மி சித்தார்த் மனதில் சுவேதா மரணத்திற்கு அவர் தான் காரணம் என்ற எண்ணம் உள்ளது‌. அதை மாற்ற வேண்டும் என பேச இதனை தமன்னா ஒட்டுக்கேட்டு விடுகிறாள்.

  சித்தார்த் மனதில் இருந்து ஸ்வேதாவை மறக்க வைக்க வேண்டும் என பொம்மி முயற்சி செய்ய இதற்கு எதிரான வேலைகளை தமன்னா செய்கிறாள். பொம்மி ஸ்வேதா ஸ்டைலில் சித்தார்த்துக்கு போன் போட்டு ஒரு இடத்துக்கு வர சொல்லி யாரென சொல்லாமல் பாட்டு பாட சித்தார்த் யாரென தேடுகிறான்.

  Also read... ரசிகர்களை சந்திக்கும்போது செருப்பு அணிய மாட்டேன்... அமிதாப் பச்சன் கூறிய காரணம்!

  அடுத்து அவனது கல்லூரி நண்பர்கள் வீட்டுக்கு வந்து காலேஜில் ஒரு பங்க்ஷன், நீ வந்து பாட்டு பாடணும் என சொல்ல முதலில் மறுக்கும் சித்தார்த் பிறகு ஒப்புக்கொள்கிறான். இப்படியான நிலையில் இதனை கெடுக்க தமன்னா சித்தார்த்தின் மூன்று நண்பர்களில் ஒருவனுக்கு பணம் கொடுத்து திட்டம் ஒன்றை போட அடுத்து நடக்கப் போவது என்ன? பொம்மி எப்படி இந்த முயற்சியில் வெற்றி பெற போகிறாள் என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv