ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தற்கொலை செய்ய முடிவெடுத்த சித்தார்த் - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்

தற்கொலை செய்ய முடிவெடுத்த சித்தார்த் - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்

நினைத்தாலே இனிக்கும் சீரியல்

நினைத்தாலே இனிக்கும் சீரியல்

தற்கொலை செய்ய முடிவெடுத்த சித்தார்த், கடைசியில் அவன் வாழ்க்கையில் நடந்த சோகம் என்ன? நினைத்தாலே இனிக்கும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நினைத்தாலே இனிக்கும். சித்தார்த் மயங்கி விழுந்து ஹாஸ்பிடல் அனுமதித்த போது மீரா மீரா என உச்சரித்த நிலையில் யார் அந்த மீரா என்பதை அறிந்து கொள்ள பொம்மி அவனது டைரியை எடுத்து படிக்க அவனுடைய பிளாஸ்பேக் காதல் கதை தெரிய வருகிறது.

  டைரியைத் தொடர்ந்து படிக்கும் பொம்மிக்கு மேலும் சில உண்மைகள் தெரிய வருகிறது. இவற்றை வைத்து அடுத்த வரும் நாட்களில் சீரியல் எபிசோடுகள் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

  அதாவது சித்தார்த்தின் கல்லூரி காலத்தில் அவனது நெருங்கிய தோழி ஸ்வேதா மீரா என்ற பெயரில் அவனை காதலிப்பதாக சொல்லி வர பிறகு அது ஸ்வேதா தான் என தெரியவர பிறகு இருவரும் கல்லூரியில் ஒருவருக்கு ஒருவர் ஐ லவ் யூ என சத்தமாக கத்தி சொல்லிக் கொள்கின்றனர். பின்னர் ஸ்வேதா மற்றும் சித்தார்த் என இருவரும் ஸ்வேதாவின் வீட்டிற்கு செல்ல அப்போது அவருடைய அப்பா இவர்களின் காதலை பரிசோதிக்க சித்தார்த்திடம் தன்னுடைய மகளுக்கு கல்யாணம் என சொல்ல சித்தார்த் கோபமாகி அங்கிருந்து கிளம்பி வந்து விடுகிறான்.

  பிறகு ஸ்வேதாவின் அப்பா சித்தார்த்திடம் பேச வர மியூசிக்க வச்சுட்டு என் பொண்ணை எப்படி காப்பாற்றுவ என சொல்ல சித்தர் கோபத்தில் உங்க பொண்ணு தான் என்னை தேடி வந்தால் என சொல்லிவிட இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் ஸ்வேதாவிடம் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் வீட்டை விட்டு வெளியே வா உனக்காக நான் காத்துக் கொண்டிருப்பேன் என சொல்லி விடுகிறான்.

  Also read... வீக்கென்ட் மூவி பிளானுக்கு ரெடியா? இந்த வார ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

  இந்த சமயத்தில் ஸ்வேதாவின் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட காதலி வராத சோகத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறான் சித்தார்த். கடைசி நிமிடத்தில் ஸ்வேதா வந்துவிட பின்னர் ஸ்வேதா விளையாட்டாக கீழே விழ போவதாக சொல்ல உண்மையில் தவறி கீழே விழுந்து விடுகிறார். இதனால் ஸ்வேதாவின் பெற்றோர் தன்னுடைய மகளின் மரணத்திற்கு சித்தார்த் தான் காரணம் என குற்றம் சாட்டுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து சித்தார்த் வாழ்க்கையில் நடந்தது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv