ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொம்மியிடம் மன்னிப்பு கேட்க முடிவெடுக்கும் சித்து - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்!

பொம்மியிடம் மன்னிப்பு கேட்க முடிவெடுக்கும் சித்து - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்!

நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்

பொம்மியிடம் மன்னிப்பு கேட்க முடிவெடுக்கும் சித்து, தமன்னா செய்யும் சூழ்ச்சி அடுத்து நட்க்கப்போவது என்ன என நினைத்தாலே இனிக்கும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நினைத்தாலே இனிக்கும். இந்த சீரியலில் பொம்மி கர்ப்பமாக இருப்பதாக நினைத்து அனைவரும் அவர் மீது பாசத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பாட்டி வீட்டில் அனைவரையும் அழைத்து பங்கஷன் மாதிரி செய்து தீர்த்தம் கொடுக்க வேண்டும் என சொல்ல, பொம்மி வேண்டாம் என சொல்ல , சாவித்திரி கண்டிப்பாக பங்க்ஷன் நடத்த வேண்டும் என ஏற்றி விடுகிறாள்.

இதனால் பொம்மி , சித்தார்த்திடம் , தாத்தா பாட்டி அதிகம் ஆர்வமாக இருப்பதாகவும், நான் கர்பமில்லாத விஷயம் தெரியவரும்போது நான் எல்லாருக்கும் வேண்டாதவள் ஆகிவிடுவேன் என சொல்ல, சித்தார்த் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன் என வாக்கு கொடுக்கிறார்.

பிறகு சித்தார்த் சொன்னதை நினைத்து , அந்த பேனாவில் பொம்மி தன் காதலை குறித்து எழுதியதை சித்தார்த் படித்துவிட்டு பீல் ஆகிறான். மேலும் பொம்மி சமையல் செய்யும் போது விரலில் சூடுப்படுகிறது, சித்தார்த் மருந்து போட்டு தான் சமைப்பதாக சொல்கிறான். ஆனால் சித்து சமைத்த சாப்பாடு சரி இல்லாமல் போக பொம்மி அவர் அன்போடு சமைப்பதால் நன்றாக இருக்கிறது என சொல்கிறார்.

இதனால் சாவித்திரி, தமன்னாவிடம் கோபமாக அவர்கள் சேர்ந்து வாழ்வது போல் தான் தெரிகிறது என சொல்லி , தீர்த்தம் கொடுக்கும் பக்‌ஷனில் தாத்தாவே அவளை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவார் என சொல்கிறாள்.

அடுத்து தூக்கத்தில் பொம்மி வேம்பு காட்டிய அன்பு நிலைக்காதோ என்று புலம்புவதை சித்து கேட்டு தூங்க முடியாமல் தவிக்க சித்து பொம்மியிடம் மன்னிப்பு கேட்க அவளிடமே ஆலோசனை கேட்கிறான் என்பது தெரியாமல் பொம்மி அவனுக்கு ஆலோசனை சொல்கிறாள்.

அடுத்து சித்து பொம்மியிடம் மன்னிப்பு கேட்க பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது அதை தமன்னா மறைந்து கேட்க பின்னர் பொம்மி அதை பார்த்து சித்துவிடம் சொல்ல தாத்தா சித்துவிடம் அக்கெளன்ஸ் வேலையை பார்த்துக்கொள்ள சொல்கிறார். மேலும் அறைக்குள் எட்டி பார்த்ததற்காகவும் பொம்மியை இழிவாக பேசியதற்காகவும் சித்து தமன்னாவை எச்சரிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Also read... உத்தமவில்லன் நஷ்டம்... கமல் அளித்த வாக்குறுதி.. மனம் திறந்த லிங்குசாமி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv