ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நினைத்தாலே இனிக்கும். நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் பொம்மி சித்தார்த்துடன் நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தி அதிர்ச்சி கொடுத்தாள்.
இதையடுத்து இந்த சீரியலில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது தன்னுடைய அம்மா வீட்டுக்கு வரும் பொம்மி நீயாவது உண்மையான அம்மாவா? இல்ல பொய்யா? என கேட்க அவளது அம்மா பொம்மியை சமாதானம் செய்கிறாள்.
பிறகு பொம்மி கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த தோற்றத்துக்கு மாற மறுநாள் சித்தார்த் பொம்மியை தேடி வீட்டுக்கு வர பொம்மி அவனை வீட்டை விட்டு வெளியே துரத்தி பஞ்சாயத்தில் புகார் அளிக்கிறாள். பஞ்சாயத்து கூட்டத்தில் முதலில் நீ கிராமத்து ஆளாக மாறி இந்த ஊரில் விவசாய தொழில் செய்ய வேண்டும் என தீர்ப்பளிக்கின்றனர்.
இதையடுத்து சித்தார்த் விவசாய தொழிலை செய்ய முடிவெடுக்க தவமணி சித்தார்த்துக்கு யாரும் எந்த உதவியும் செய்ய கூடாது என சதி வேலை செய்ய சித்தார்த் மாடு இல்லாமல் கலப்பையை தனது தோளில் சுமந்து நிலத்தை உழுகிறான்.
அடுத்து பொன்னியாக டான்ஸ் ஜோடி டான்ஸ் ரேமா என்ட்ரி கொடுத்து சித்தார்த்துடன் நெருங்கி பழகி பொம்மிக்கு பொறாமையை உண்டு பண்ண திட்டம் தீட்டுகிறாள். அடுத்து சித்தார்த் சாப்பிட போக தவமணி இந்த ஊரில் கூலி வேலை செய்து வரும் காசில் தான் சாப்பிட வேண்டும் என சொல்ல பொம்மியும் ஆமாம் சொல்கிறாள்.
இதனால் சித்தார்த் உடல்நிலை சரியில்லாமல் பொம்மி வீட்டின் வெளியே மயங்கி விழுகிறான். பொம்மி வீட்டில் எல்லோரும் மயான கொள்ளை திருவிழாவுக்கு சென்றிருக்க பொம்மி சித்தார்த்தை வீட்டுக்கு அழைத்து சென்று மருந்து கொடுக்கிறாள்.
கோவில் திருவிழா முடிந்து வீட்டுக்கு வரும் குடும்பம் இருவரும் ஒன்று சேர்ந்து விட்டதாக நினைக்க பொம்மி எதிர்பாராத அதிர்ச்சி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv