ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நினைத்தாலே இனிக்கும். இந்த சீரியலில் அஞ்சலி ஸ்வீட்டின் அடுத்த வாரிசை அறிவிக்க தாத்தா தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளை நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் பொம்மி ஜெயித்து வந்த நிலையில் கடந்த சில போட்டிகளில் தமன்னா சூழ்ச்சி செய்து ஜெயித்து வருகிறார்.
இதையடுத்து வரும் நாட்களில் நடக்க போவது என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, கடைசி போட்டியாக அதிரசம் செய்ய வேண்டும் என போட்டி வைக்க பொம்மி செய்த அதிரசத்தை மனோ தரப்பு எடுத்து கொண்டு அதற்கு மாற்றாக வேறு அதிரசங்களை வைக்கின்றனர்.
இந்த அதிரசங்கம் அரசு அலுவலகம் ஒன்றிற்கு அனுப்பி வைக்க இந்த போட்டியில் மனோ ஜெயித்ததாக அறிவிக்கின்றனர். இதையடுத்து மனோவை வாரிசு நாற்காலியில் உட்கார சொல்ல அவன் நான் ஜெயித்ததே என் அம்மாவை இங்கு உட்கார வைக்க தான் என சொல்லி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறான்.
Also read... சிவாஜியாக நடித்து ஹவுஸ்மேட்ஸ்களின் பாராட்டை பெற்ற அசீம் - வெளியானது வீடியோ!
அடுத்து மனோவின் அம்மா சாவித்திரியாக நடிகை டாக்டர் ஷர்மிளா வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்க மனோ அவளை நாற்காலியில் உட்கார சொல்ல சாவித்ரி மகனை பளாரென அறைந்து மனோ தரப்பு செய்த தில்லாலங்கடி வேலையை உடைக்கிறார்.
இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? வாரிசு நாற்காலியில் அமர போவது யார்? சாவித்ரியின் திட்டம் என்ன? என்பதை நோக்கி சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv