ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அஞ்சலி ஸ்வீட் கடைக்கு சீல் - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்!

அஞ்சலி ஸ்வீட் கடைக்கு சீல் - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்!

நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்

அஞ்சலி ஸ்வீட் கடைக்கு சீல் வைக்கும் அதிகாரிகள், நடக்க போவது என்ன என நினைத்தாலே இனிக்கும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தாலே இனிக்கும். இந்த சீரியலில் அஞ்சலி ஸ்வீட்டின் வாரிசான பொம்மியை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்க தமன்னாவின் சூழ்ச்சியால் பொம்மி அசிங்கப்பட்டாள். அதோடு சாவித்ரி மறைமுகமாக பொம்மிக்கு எதிரான ஆட்டத்தை தொடங்கினாள்.

அதாவது, சாவித்ரி திட்டம் போட்டு நமக்கு எதிரான ஸ்வீட் கடைகளில் தள்ளுபடி விலையில் விற்பனை நடக்கிறது என சொல்ல பொம்மி நாமும் 5% தள்ளுபடி விலையில் கொடுக்கலாம் என சொல்கிறாள்.

இதை வைத்து சாவித்திரி 50% தள்ளுபடி என நோட்டீஸ் அடித்து அனைவருக்கும் கொடுக்கிறாள். அதற்கு முன்னதாக பொம்மியிடம் 5% தள்ளுபடி நோட்டீஸை காட்டி அவளை நம்ப வைக்கிறாள்‌. 50% தள்ளுபடி என்பதால் கூட்டம் அலை மோத குடும்பம் மொத்தமும் உண்மை தெரியாமல் மகிழ்ச்சியில் இருக்க பத்மநாபன் பொம்மியை திட்டி தீர்த்து உண்மையை உடைக்கிறார்.

அடுத்து சாவித்திரியின் சூழ்ச்சியால் அஞ்சலி ஸ்வீட் கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைக்க பழி பொம்மியின் மீது விழுகிறது. சித்தார்த் உட்பட எல்லோருக்கும் சாவித்திரி மீது சந்தேகம் வர பொம்மி அதை நம்ப மறுக்கிறாள்‌.

Also read... பாலிவுட்டின் தோல்விக்கு கரண் ஜோஹர், ராஜமௌலி கூறும் காரணங்களும் தீர்வும்

அப்படி சாவித்திரி செய்த சூழ்ச்சி என்ன? கடைக்கு ஏன் சீல் வைத்தார்கள் என்ற கோணத்தில் தான் நினைத்தாலே இனிக்கும் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv