Home /News /entertainment /

மாமனாருக்கு சவால் விடும் பொம்மி - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்

மாமனாருக்கு சவால் விடும் பொம்மி - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்

நினைத்தாலே இனிக்கும் சீரியல்

நினைத்தாலே இனிக்கும் சீரியல்

கணபதி ஸ்வீட்ஸ், அஞ்சலி ஸ்வீட்ஸ் மற்றும் பல ஸ்வீட்ஸ் கடை சார்பாக போட்டி நடக்க பல தடைகளை தாண்டி பொம்மி இந்த போட்டியில் ஜெயிப்பாள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடும்பத்துக்காக விட்டு கொடுக்க இந்த போட்டியில் அஞ்சலி ஸ்வீட்ஸ் ஜெயிக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
    மாமனாருக்கு சவால் விடும் பொம்மி, நடக்க போவது என்ன? நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நினைத்தாலே இனிக்கும். கணபதி ஸ்வீட்ஸ், அஞ்சலி ஸ்வீட்ஸ் மற்றும் பல ஸ்வீட்ஸ் கடை சார்பாக போட்டி நடக்க பல தடைகளை தாண்டி பொம்மி இந்த போட்டியில் ஜெயிப்பாள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடும்பத்துக்காக விட்டு கொடுக்க இந்த போட்டியில் அஞ்சலி ஸ்வீட்ஸ் ஜெயிக்கிறது. இதனால் சித்தார்த் பொம்மி மீது பயங்கர கோபத்தில் இருக்கிறான்.

    இப்படியான நிலையில் பொம்மியை அவரது மாமனார் வீட்டுக்கு குடி போதையில் வந்து கண்டபடி பேச இதுவரை பொம்மிக்கு ஆதரவாக பேசிய சித்தார்த் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்க்கிறான். பொம்மி சித்தார்த்திடம் கவலைப்பட குடும்பத்துக்காக தானே விட்டு கொடுத்த அப்போ திட்டுனா வாங்கு, உனக்காக சப்போர்ட் செய்ய முடியாது என கோபமாக கூறி விடுகிறான்.

    Also read... பிட்னெஸை நிரூபிக்க சத்யாவுக்கு கெடு வைத்த அதிகாரி - சத்யா 2 சீரியல் அப்டேட்!

    அடுத்ததாக அஞ்சலி ஸ்வீட்ஸ் கடைக்கு பெரிய ஆர்டர் ஒன்று வர அதிரசம் செய்யும் வேலையை பொம்மிக்கு கொடுக்கிறார் தாத்தா. அவளும் ஆசை ஆசையாக அதிரசம் செய்ய இது பொம்மி செய்தது என தெரிந்ததும் காலில் போட்டு மிதித்து பொம்மியை அசங்கப்படுத்துகிறார் சித்தார்த்தின் அப்பா.

    இதனால் கோபமடையும் பொம்மி உங்களுக்கு எதிராக கணபதி ஸ்வீட்ஸ் கடையை தொடங்கி ஜெயித்து காட்டுறேன் என சவால் விடுகிறாள். அடுத்து நடப்பது என்ன என்று இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி