ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தாத்தாவின் முடிவால் தமன்னா செய்யும் சதி - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்!

தாத்தாவின் முடிவால் தமன்னா செய்யும் சதி - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்!

நினைத்தாலே இனிக்கும் சீரியல்

நினைத்தாலே இனிக்கும் சீரியல்

அஞ்சலி ஸ்வீட்டின் வாரிசான பொம்மி, தாத்தாவின் முடிவால் தமன்னா செய்யும் சதி என நினைத்தாலே இனிக்கும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நினைத்தாலே இனிக்கும். இந்த சீரியலில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சாவித்திரி அனைவருக்கும் காபி போட்டு கொடுக்க, பொம்மி லேட்டாக தூங்கி எழுந்து வருகிறாள். அடுத்து தாத்தா சாவித்திரியை பாராட்ட , சாவித்திரி சித்தாத்திற்கு காபி கொடுக்க போக அனைவரும் வியப்பாக பார்க்கிறார்கள்.

அடுத்து சித்தார்த்திற்கு சாவித்திரி காபி கொடுக்க, அவன் அவள் மீது கோபப்படுகிறான். பத்மநாபன் அவன் மீது கோபபப்ட , சாவித்திரி சித்தார்த்திற்கு பிடிக்கவில்லை எனில் நான் போகிறேன் என நாடகம் ஆடுகிறாள்.

மேலும் சித்தார்த்தை பொம்மி சமாதானம் செய்ய முயல. அவன் சாவித்திரியை நம்ப வேண்டாம் என சொல்கிறான். அடுத்து தாத்தா அனைவரிடம் பொம்மி வாரிசானதற்கு அனைவரையும் அழைத்து விழாவாக செய்ய வேண்டும் என சொல்கிறார்.

இதற்காக அனைவரும் ரெடியாக , சாவித்திரி மனோவிடம் இன்று பல விஷயங்கள் நடக்க போவதாக சொல்கிறார். அகர்வால் ஸ்வீட் ஓனர் தன் பிஸ்னசை விரிவுப்படுத்த உங்களிடம் சேர்ந்து விரிவு செய்ய போவதாக சொல்கிறார்,

தாத்தா அனைவருக்கும் பொம்மியை அறிமுகம் செய்ய , தமன்னா டுவிஸ்ட் செய்ய, பொம்மியை ஆடி பாடி தெருவில் அதிரசம் விற்பது போல் செய்து காட்ட , அனைவரும் முகம் சுழிக்கின்றனர். பின் அகர்வால் ஸ்வீர் ஓனர் இங்கிலீஷில் பேச , அவளுக்கு புரியாமல் போகிறது.

Also read... முதல் முறையாக இணையும் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ்... பூஜையுடன் தொடங்கிய படம்!

சாவித்திரி பிளான் செய்து ஜீஸ் கொண்டு வரும் நபரின் காலை தட்டிவிட , அவனுடன் ஜீஸும் கொட்ட , பொம்மி அதை கிளின் செய்கிறாள்.. அகர்வால் ஸ்வீட் ஓனர் பொம்மியை கேவலமாக பார்த்து போக, சாவித்திரி அவரை அழைத்து செம்பல் ஸ்வீட்டை கொடுத்து அந்த ஆர்டரை வாங்குகிறார். அடுத்து அவளுக்கு பாராட்டு கிடைக்கிறது‌. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? சித்தார்த் என்ன செய்ய போகிறான்? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv