Home /News /entertainment /

ரங்கநாயகி வீட்டில் சக்தியை பார்த்ததும் பதறிய மீனாட்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

ரங்கநாயகி வீட்டில் சக்தியை பார்த்ததும் பதறிய மீனாட்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

ரங்கநாயகி வீட்டில் சக்தியை பார்த்ததும் பதறிய மீனாட்சி, அடுத்து நடந்தது என்ன மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் சக்தியை வெற்றி ஃபாலோ செய்ய சக்தி வெற்றி வீட்டிற்கு சரண்யாவை பார்க்க செல்கிறாள்‌.

    வெற்றியும் கிரியும் மறைந்திருந்து பார்க்க  ரங்கநாயகிக்கு மினிஸ்டரிடம் இருந்து போன் கால் வர அவள் புறப்பட அதே நேரம் சக்தி உள்ளே வர இருவரும் சந்தித்தால் பெரிய சண்டை வருமென வெற்றியும் கிரியும் பயப்பட அந்த நேரம் சக்தியின் வண்டி சாவி கீழே விழ அவள் குனிய இரங்கநாயகி கார் க்ராஸ் செய்கிறது.. வெற்றி நிம்மதி அடைகிறான்.

    பிறகு சக்தி முதல் முறையாக வீட்டுக்கு வந்திருப்பதால் வலது காலை வைத்து போனால் நல்லாயிருக்கும் என ஃபீல் பண்ண சக்தி வலது காலை வைத்து உள்ளே போக வெற்றி மகிழ்ச்சியடைகிறான்.

    அடுத்து சக்தியின் குரலை கேட்டு மீனாட்சி பயந்து பதுங்கி வெளியே ஒட வெற்றி கிரி குழப்பமடைகின்றனர். இந்த பக்கம் மெஸ்ஸில் யமுனா தனியாக கஷ்டபட அங்கு வரும் கார்த்தி யமுனாவுக்கு உதவி செய்கிறான்.

    சக்தி சரண்யாவை சந்தித்து அசோக் அண்ணனுக்காக சமாதானப்படுத்தி போன் செய்து தர அசோக்கிடம் சரண்யா, என்ன சீக்கிரம் கூட்டிட்டு போயிடுங்க என பேசுகிறாள்.

    Also read... பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷனுக்கு செல்லும் படக்குழுவினர்

    மெஸ்ஸில் யமுனா கார்த்திக்கை அமர வைத்து பரிமாற சரண்யா சக்தியும் வெளியே வர வெற்றி சக்தியை காதலுடன் பார்க்கிறான்.

    மெஸ்ஸில் யமுனா அம்மாவிற்காக காத்திருக்க மீனாட்சி கிணற்றடியில் நின்று பணம் வாங்க முடியலையே என அழுகிறாள். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? மீனாட்சி என்ன செய்ய போகிறாள்? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி