Home /News /entertainment /

புஷ்பா வீட்டுக்கு செல்லும் மீனாட்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

புஷ்பா வீட்டுக்கு செல்லும் மீனாட்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

புஷ்பா வீட்டுக்கு செல்லும் மீனாட்சி, மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. நேற்றைய எபிசோடில் வெற்றி ரங்கநாயகியிடம் சிக்கிக் கொண்டார். இதனையடுத்து இன்றைய எபிசோட்டில் வெளியே சென்று வீட்டுக்குள் வந்த வெற்றியை ரங்கநாயகி திட்டுகிறாள். ஊரில் விநாயகர் சதுர்த்தி பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள் அதற்காக போனேன் என்று சொல்ல ஏன் பொய் சொன்னாய் என்று ரங்கநாயகி கேட்டு, பூஜா வந்துவிட்டு வருத்தத்துடன் சென்றதாக சொல்லி திட்டுகிறாள்.

    இந்த பக்கம் யமுனாவின் கையில் பட்டிருக்கும் காயத்திற்கு மீனாட்சி மயிலிறகால் மருந்திட்டு 10 லட்ச ரூபாய் விஷயத்தை நீதி மணியிடம் நாளை சொல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறாள்.

    மறுநாள் காலையில் துளசி மாடத்தை சுற்றி யமுனா சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, பின்னால் வரும் கார்த்திக் அவளிடம் கையில் காயம் பற்றி விசாரிக்க வெட்கத்துடன் உள்ளே செல்லும் யமுனா ஜன்னல் திறந்து மெதுவாக கார்த்திக்கை பார்த்து புன்னகைக்கிறாள்.

    அடுத்ததாக வெற்றியிடம் தங்கை சரண்யா சக்திக்கு ஏதாவது பரிசு பொருள் வாங்கி தர சொல்ல இந்த பக்கம் சக்தி வீட்டில் இல்லாததால் யமுனாவிடம் மெஸ்ஸை பார்த்துக் கொள்ள சொல்லி மீனாட்சி நீதிமணியை சந்திக்க கிளம்புகிறார்.

    Also read... உலக சாதனை படைத்தது யார்? - கமல், ரஜினி ரசிகர்களின் இணைய போர்

    வெற்றி நண்பர்களிடம் பரிசு பொருள் பற்றி ஐடியா கேட்க அவர்கள் சொதப்புகின்றனர். அடுத்து மீண்டும் தங்கை சரண்யாவிடம் வரும் வெற்றி சக்திக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று கேட்க அம்மா தனக்கு கொடுத்த புடவையை வெற்றியிடம் எடுத்து கொள்கிறாள்.

    புடவையுடன் மீனாட்சி மெஸ்க்கு செல்லும் வெற்றி அங்கு யமுனாவிடம் சக்தி எங்கே என்று கேட்க, பின் சக்திக்காக காத்திருக்க அங்கு இருக்கும் சாமியார் (கிரி)சண்முகம் மற்றும் தடியனை பற்றிய உண்மைகளை சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதனை அடுத்து நடக்கப்போவது என்ன? புஷ்பா வீட்டு மீனாட்சிக்கு நடக்கப் போவது என்ன? என்பது இனிவரும் எபிசோடுகளி தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி