Home /News /entertainment /

சக்தியை பார்க்க மெஸ்க்கு வந்து வசமாக சிக்கிய வெற்றி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

சக்தியை பார்க்க மெஸ்க்கு வந்து வசமாக சிக்கிய வெற்றி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

சக்தியை பார்க்க மெஸ்க்கு வந்து வசமாக சிக்கிய வெற்றி, மீனாட்சி பொண்ணுங்க சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் இயற்கை விவசாய பொருட்களை கொண்டு வருவது போல் வெற்றி மற்றும் நண்பர்கள் மீனாட்சி மெஸ்ஸிக்கு வருகின்றனர்.

    அவர்களைப் பார்க்கும் சக்தி நெல் வகைகளை பற்றியும் விளைச்சல் பற்றியும் விவரங்களை கேட்க அது தெரியாமல் வெற்றி முழிக்க அவர்கள் மேல் சந்தேகம் கொள்ளும் சக்தி துருவித் துருவி கேள்விகளை கேட்கிறாள்.

    இந்த பக்கம் ரங்கநாயகியின் வீட்டிற்கு வரும் பூஜா வெற்றியைப் பற்றி விசாரிக்க வெற்றி பூஜாவை பார்க்க சென்றதாக சொல்ல சக்தி விநாயகர் சிலைக்கு முன்பு போடும் கோலத்தை வெற்றி ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறான்.

    வெற்றியின் அருகில் வரும் சக்தி கோலமாவு கையில் கொடுத்து விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என்று ஆங்கிலத்தில் எழுதும்படி சொல்லிவிட்டு செல்ல வெற்றி திருதிருவென முழித்துக் கொண்டு எழுத தயாராகிறான்.

    அந்த நேரத்தில் வெற்றியின் நண்பர்கள் கார்த்திக்கை கூட்டி வர அவரை ஆங்கிலத்தில் எழுத சொல்ல கார்த்திக் ஆங்கிலத்தில் யமுனா என்ற எழுத்தை ஹைலைட் பண்ணி எழுதுகிறான்.

    Also read... பிகினியில் நடிகை அனன்யா பாண்டே - இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்

    கார்த்தி எழுதி முடிக்கும் பொழுது சக்தி வேகமாக வர கார்த்திக்கிடமிருந்து கோலப்பொடியை வெற்றி வாங்கி தான் எழுதியது போல் பில்டப் பண்ணுகிறான்.

    இந்த பக்கம் விநாயகர் பூஜை பண்ணாமல் வெற்றிக்காக காத்திருக்கும் ரங்கநாயகி பின்பு மெதுவாக பூஜையை ஆரம்பிக்கிறாள். கோலமாவில் யமுனா பெயர் எழுதப்பட்டு இருப்பதை சக்தி பார்த்தால் என்ன நடக்கும்? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி