Home /News /entertainment /

யமுனாவின் சம்மந்தம் நின்று போனதால் சாக முடிவெடுக்கும் மீனாட்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

யமுனாவின் சம்மந்தம் நின்று போனதால் சாக முடிவெடுக்கும் மீனாட்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

புஷ்பாவால் யமுனாவின் சம்மந்தம் நின்று போனதால் சாக முடிவெடுக்கும் மீனாட்சி, மீனாட்சி பொண்ணுங்க சீரியலின்  இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  யமுனாவை பெண் பார்க்க வந்துள்ள மாப்பிள்ளை வீட்டார் மீனாட்சியிடம் புருஷன் குறித்து கேட்க அவர் அதிர்ச்சியாகி நிற்கிறார்.

    இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் வாசலில் புஷ்பா கத்தும் சத்தம் கேட்க அனைவரும் வெளியே வந்து பார்க்கும் பொழுது புஷ்பா வக்கீல் நோட்டீசை கையில் வைத்துக் கொண்டு எங்களது வீட்டில் நீங்கள் குடியிருந்து எங்களுக்கு நோட்டீஸ் அனுப்புகிறீர்களா என்று அவமானப்படுத்துகிறாள்.

    மீனாட்சி புஷ்பாவிடம் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சமாளிக்க முயற்சி செய்ய 10 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டாய் என்று புஷ்பா சொல்லும் பொழுது சக்தி தலையிட்டு புஷ்பாவிடம் சண்டை போடுகிறாள். மேலும் புஷ்பா இவளோட புருஷன் இவள விட்டு ஓடி போயிட்டா இவகிட்ட சம்பந்தம் பேச வந்திருக்கீங்க என மாப்பிள்ளை வீட்டாரையும் அசிங்கப்படுத்துகிறார்.

    Also read... சமந்தாவின் யசோதா படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? நியூ அப்டேட்

    பிறகு மாப்பிள்ளை வீட்டாரிடம் மீனாட்சி கெஞ்சி பார்க்க அவர்கள் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று கிளம்பி செல்ல மீனாட்சி சக்தியிடம் மாப்பிள்ளை வீட்டார் கிளம்பி சென்றதற்கு நீ தான் காரணம் என்று சண்டை போடுகிறாள்.

    மேலும் மீனாட்சி சாகப்போவதாக சொல்ல அனைவரும் கண்ணீர் வடிக்கின்றனர். அடுத்து நடக்கப் போவது என்ன? சக்தி என்ன செய்யப் போகிறாள் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி