Home /News /entertainment /

யமுனாவை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டார் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

யமுனாவை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டார் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

யமுனாவை மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வந்ததால்  வருத்தப்படும் வெற்றி, மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் யமுனாவை பார்க்க மெஸ்க்கு வரும் கார்த்திக் யமுனா இல்லாததால் அங்கிருந்து சாப்பிடாமல் கிளம்பி செல்கிறான். அதன் பிறகு யமுனாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரும் பொழுது பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும் என்று மீனாட்சி கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார்.

    அப்படியே இந்த பக்கம் சக்தி அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் வந்து சேர அதை பார்த்து புஷ்பா டென்ஷனாகிறாள். இதனால் மீனாட்சி வீட்டுக்குச் சென்று சண்டை போட முடிவு எடுக்கிறாள். இந்த பக்கம் யமுனாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வர மீனாட்சி அவர்களை வரவேற்று உபசரிக்கிறாள்.

    இந்த நேரத்தில் மெஸ்க்கு வரும் வெற்றி மாப்பிள்ளை வீட்டார் வந்திருக்கும் செய்தி அறிந்து சக்தியை தான் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று தவறாக புரிந்து கொண்டு அதிர்ச்சியுடன் ஒளிந்து அவர்கள் வீட்டிற்குள் நடப்பதை நோட்டம் விடுகிறான். கவர்மெண்ட் மாப்பிள்ளை என்பதால் சம்பந்தம் முடிந்து விடும் என்று ஜன்னலில் இருந்து பார்க்கும் வெற்றி வருத்தப்படுகிறான்.

    Also read... கருப்பு நிற லெஹங்காவில் நடிகை ரகுல் பிரீத் சிங் - வைரலாகும் போட்டோஸ்!

    தட்டை மாற்றிக் கொள்ளலாம் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது மாப்பிள்ளையின் அம்மா மீனாட்சியின் கணவர் பற்றி கேட்க மீனாட்சி பதில் சொல்ல முடியாமல் அதிர்ச்சி அடைகிறாள். அந்த நேரத்தில் வாசலில் புஷ்பா நோட்டீசுடன் வந்து நிற்கிறாள். இதனால் மீனாட்சி பேரதிர்ச்சி அடைகிறாள்.

    இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன? யமுனாவுக்கு இந்த சம்பந்தம் அமையுமா? என்பதை அறிந்து கொள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியலை இரவு 9 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி