Home /News /entertainment /

சங்கிலியை பார்த்து பயந்து நடுங்கும் மீனாட்சி... சக்திக்கு தெரிய வந்ததா உண்மை? - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

சங்கிலியை பார்த்து பயந்து நடுங்கும் மீனாட்சி... சக்திக்கு தெரிய வந்ததா உண்மை? - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மெஸ்க்கு வரும் சங்கிலியை பார்த்து பயந்து நடுங்கும் மீனாட்சி, சக்திக்கு உண்மை தெரிய வந்ததா என்பது மீனாட்சி பொண்ணுங்க சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. புஷ்பா கோபத்தோடு இருக்க சங்கிலி மெஸ்க்கு வருகிறான்.

    இன்றைய எபிசோடில் மீனாட்சி மெஸ்க்கு வரும் சங்கிலியை பார்த்து மீனாட்சி, யமுனா என இருவரும் பயப்படுகின்றனர். சக்திக்கு தெரிய வேண்டாம் என்று பேசிக் கொண்டிருக்கும் போது சக்தி வருகிறாள்.

    புரோக்கர் யமுனா மேரேஜ் பற்றி பேச கார்த்திக் அப்செட்டாகிறான். ரங்கநாயகியிடம் சகுந்தலா தன் மகன் அசோக்கிற்கு இரண்டாவது கல்யாணம் செய்யப் போவதாக சொல்ல ரங்கநாயகி டென்ஷனாகிறாள்‌.

    பிறகு மீனாட்சி யமுனாவின் திருமணத்தை தள்ளி வைக்கலாம் என்று சொல்ல சக்தி மறுநாளே மாப்பிள்ளை வீட்டாரை வரச் சொல்லி புரோக்கரிடம் சொல்கிறார்.

    Also read... பாடகர் பம்பா பாக்யா பாடிய தமிழ் பாடல்கள் ஒரு லிஸ்ட்!

    கார்த்திக்கு யமுனா ஸ்வீட் வைக்க அவன் வேண்டாம் என சொல்ல கார்த்தி சாம்பாரை தன் மேல் ஊற்றிக் கொள்கிறான். அடுத்ததாக கிணற்றடியில் சென்று துணியை அலசி கொண்டு யமுனாவிடம் தன் காதலை சொல்கிறான். பிறகு காதலை சொல்லி விட்டு திரும்பிப் பார்க்க பின்னால் சாந்தா நின்று சிரித்துக் கொண்டிருக்க மீனாட்சி யோசனையுடன் நிற்கிறாள்.

    அடுத்து மீனாட்சி என்ன முடிவு எடுக்கப் போகிறார்? புஷ்பாவின் சூழ்ச்சிகள் சக்திக்கு தெரிய வந்ததா? அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி