ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

புஷ்பாவின் சதியால் மீனாட்சி எடுத்த முடிவு - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

புஷ்பாவின் சதியால் மீனாட்சி எடுத்த முடிவு - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

புஷ்பாவின் சதியால் மீனாட்சி எடுத்த முடிவு, கண் கலங்கி நிற்கும் 3 மகள்கள், மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் சமையல் வேலை செய்வதற்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட ஆட்களை சங்கிலி மற்றும் புஷ்பா பணம் கொடுத்து வரவிடாமல் செய்ய சாந்தா மீனாட்சியிடம் இது புஷ்பாவின் வேலை என்று சொல்கிறாள்.

    யார் தயவும் இல்லாமல் தனி ஆளாக தன் பெண்களுக்காக 400 பேருக்கு தானே சமைப்பேன் என்று மீனாட்சி இரவு முழுவதும் சமையல் வேலைகளை வெறித்தனமாக செய்து முடிக்கிறாள். அடுத்து மீனாட்சியைக் காணாமல் யமுனா சாந்தாவிற்கு ஃபோன் செய்து விசாரிக்கிறாள்.

    பின்னர் மீனாட்சியை தேடி வரும் யமுனா, துர்கா இருவரும் மீனாட்சியின் கையில் சமையல் வேலை செய்ததால் ஏற்பட்ட காயத்தை பார்த்து வருத்தம் தெரிவிக்கின்றனர். ஆட்களை வைத்து மீனாட்சி சமையல் செய்த சாப்பாட்டை எடுத்துச் செல்ல ஆர்டர் கொடுத்த நபர் மீனாட்சிக்கு தங்கச்சங்கிலியை பரிசாக கொடுத்து விட்டு செல்கிறார்.

    மேலும் வீட்டுக்கு வரும் மீனாட்சி சக்திக்கு விஷயம் தெரிய வேண்டாம் என்று சொல்லும் பொழுது சக்தி வந்து விட அம்மா சோர்வாக இருப்பதை பார்த்து காரணம் கேட்டு பின்பு கண்டுபிடித்து சக்தி கண்கலங்கி மீனாட்சியின் கைகளை பிடித்து அழுகிறாள்.

    Also read... நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள் ஒரு லிஸ்ட்!

    அதுமட்டுமல்லாமல் தன் மகள் யமுனாவிற்கு நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதால் தாம்பாள தட்டுடன் மீனாட்சி நீதிமணியின் வீட்டிற்கு வர புஷ்பா முறைத்து பார்க்கிளாள். அடுத்து நடக்கப் போவது என்ன? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv