ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஒருநாள் கலெக்டராக சாதித்து காட்டும் சக்தி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

ஒருநாள் கலெக்டராக சாதித்து காட்டும் சக்தி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

வெற்றியால் நடந்த சர்ப்ரைஸ், ஒருநாள் கலெக்டராக சாதித்து காட்டும் சக்தி, மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் ஒரு நாள் கலெக்டராக சக்தி நடிக்க வேண்டும் என்று வெற்றி சைரன் வைத்த காரில் ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறான். அங்கு பொதுமக்கள், ஏழைகள் சிலர் கையில் மனுக்களுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    வெற்றி அவர்களில் ஒருவரை விசாரிக்க அவர் விவசாய கடனாக கிடைக்கும் பணம் கிடைக்கவில்லை லஞ்சம் கேட்கிறார்கள் என்று சொல்கிறார். சக்தி அந்த அதிகாரியை உடனே தொடர்பு கொண்டு அந்த இடத்திற்கு வர சொல்லி அந்த விவசாயிக்கு பணத்தை வாங்கிக் கொடுக்கிறாள்.

    அடுத்ததாக ஒரு வயதான பெண்மணி பொது மருத்துவமனையில் டாக்டர் இல்லை, டாக்டர் வருவதே இல்லை என்று சொல்ல சக்தி தான் ஐஏஎஸ் என்று அந்த டாக்டருக்கு போன் செய்து உடனே வரச் சொல்லி அந்த பெண்மணிக்கு சிகிச்சை அளித்து அந்த டாக்டரை எச்சரித்து அனுப்புகிறாள். ஊனமுற்ற பெண்மணி தன் நிலத்தின் மூலப் பத்திரத்தை தொலைத்து விட்டதால் தன் பெண் திருமணத்தை நடத்த முடியவில்லை மூல பத்திரம் வேண்டும் என அழுதபடி சக்தியிடம் கெஞ்ச சக்தி தாசில்தாரை தொடர்பு கொண்டு அந்தப் பெண்மணியின் மூலப்பத்திரத்தின் காப்பியை ஒரு மணி நேரத்தில் வர வைத்து அந்த பெண்மணியிடம் கொடுக்க அந்த பெண்மணி வாழ்த்தி செல்கிறார்.

    Also read... முதல் முறையாக பிக்பாஸிடம் பாராட்டை பெற்ற விக்ரமன்... வெளியானது ப்ரோமோ!

    மேலும் சக்தி நூறு வருடம் வாழ வேண்டும் என்று பொதுமக்கள் வாழ்த்தி செல்கின்றனர். சக்தி தான் உண்மையான கலெக்டர் இல்லை இப்பொழுது ஐ ஏ எஸ் படித்து கொண்டிருக்கிறேன் என்று சொல்ல நீ கலெக்டராக வரவேண்டும் என்று பொதுமக்கள் வாழ்த்து செல்கின்றனர். சக்தி வெற்றிக்கு தன் நன்றியை தெரிவிக்க திடியன், வெற்றி சக்தி இருவரையும் சேர்த்து வைத்து புகைப்படம் எடுக்க வெற்றி மகிழ்ச்சி அடைகிறான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv