ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

புஷ்பாவின் சதியால் பஞ்சாயத்தை கூட்டும் இரங்கநாயகி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

புஷ்பாவின் சதியால் பஞ்சாயத்தை கூட்டும் இரங்கநாயகி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

புஷ்பாவின் சதியால் பஞ்சாயத்தை கூட்டும் இரங்கநாயகி, மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க‌. இன்றைய எபிசோடில் யமுனா மீனாட்சியிடம் பத்து லட்சம் பணம் வாங்கலனு பஞ்சாயத்துல சொல்லிடலாம் என சொல்ல மீனாட்சி யோசிக்கிறாள்‌. கணக்கு பிள்ளை வெற்றிக்கு போன் செய்து நாளைக்கு மீனாட்சி அம்மாவீட்டு பஞ்சாயத்து என்றதும் வெற்றி நீதமணிமீது கோவப்படுகிறான்..

    அடுத்த நாள் ஊரில் கணக்குபிள்ளை தண்டோரா போட சக்தி சென்னை புறப்பட துர்கா காலேஜ் செல்ல யமுனாவிடம் மீனாட்சி வீடு நம்ம கைய விட்டு போகக்கூடாது என ஃபீல் பண்ணுகிறாள்‌‌. பிறகு பஞ்சாயத்துக்கு செல்கின்றனர்.

    புஷ்பா பஞ்சாயத்துக்கு தயாராக வீட்டில் தண்டோரா போடப்பட்ட சத்தம் கேட்டு புஷ்பா சந்தோசம் அடைய சண்முகம் வேகமாக பைக் எடுத்து கொண்டு செல்கிறான்.

    பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸிற்காக சக்தி காத்திருக்க அட்வகேட் அசோக் போன் செய்து பஞ்சாயத்து பற்றி சொல்ல முயல அங்கு தண்டோரா போடப்பட அதே நேரத்தில் பஸ் வர இந்த இரைச்சலில் சக்தி அசோக் சொல்வது கேட்காமல் போனை கட் பண்ணி விட்டு, பஸ்ஸில் ஏறி போகிறாாள்.

    Also read... முன்னணி நடிகராக இருந்த போதே பாடகருக்காக கௌரவ வேடத்தில் நடித்த கமல் - எந்த படம் தெரியுமா?

    ஊர் மக்கள் பஞ்சாயத்துக்கு கூடி இருக்க அங்கு புஷ்பா, நீதிமணி, மீனாட்சி, யமுனா என எல்லோரும் வருகின்றனர். மீனாட்சி தலைகுனிய தப்பு பண்ணவங்க தான் தலை குனியனும் என திமிராக பேச இரங்கநாயகி அம்மா வர பஞ்சாயத்து ஆரம்பமாகிறது. அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv