ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீனாட்சியை மோத வந்த லாரி... காப்பாற்றிய வெற்றி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சியை மோத வந்த லாரி... காப்பாற்றிய வெற்றி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சியை லாரி மோத வந்த போது காப்பாற்றிய வெற்றி, மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் மீனாட்சி அந்த பத்து லட்சம் பணம் திருடிய பைக்கை துரத்த எதிர்பாராத விதமாக பின்னால் வரும் லாரி அவளை இடிக்க வர வெற்றி அவளை காப்பாற்றுகிறான். பிறகு கூட்டத்தில் இருக்கும் ஒருநபர் சக்திக்கு போன் செய்து நடந்த விசயத்தை கூற யமுனா துர்கா பதற சக்தி அம்மாவை பார்க்க புறப்படுகிறாள்.

  மயக்கம் தெளிந்த மீனாட்சி வெற்றிக்கு நன்றி சொல்லி பத்து லட்சம் பணம் திருடிய பைக்கை பற்றி சொல்ல வெற்றி யோசிக்கிறான். அதே நேரத்தில் அங்கு சக்தி வர மீனாட்சி இந்த விசயம் என் பொண்ணுக்கு தெரியக்கூடாது எனவும் சொல்லி விடுகிறாள்.

  பின்னர் சக்தி அம்மாவை வெற்றியின் ஜீப்பில் ஏற்றி வீட்டுக்கு அழைத்து வர யமுனா துர்கா பதற அவர்களிடம் ஒன்னும் பிரச்சினை இல்லை. பயப்படாதிங்க என சொல்ல சக்தி வெற்றியை உள்ளே அழைக்க அவன் வலது காலை எடுத்து வைத்து வர சக்தி நன்றி கூறுகிறாள்.

  பின்னர் அவனோட பெயரை கேட்க, வெற்றி என்று சொல்லிவிட்டு பின்பு சமாளித்து செல்வன் என்று சொல்ல உள்ளே யமுனாவிடம் மீனாட்சி அந்த பணம் திருடியவனை பற்றி சொல்கிறாள்.

  இரங்கநாயகி நாளைய பஞ்சாயத்து பற்றி யோசிக்க கணவன் செல்வமுருகன் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என தைரியம் கொடுக்க புஷ்பா  பஞ்சாயத்தில் மீனாட்சி குடும்பத்தை நடு ரோட்டுக்கு கொண்டு வந்துவிடலாம் என சந்தோஷப்படுகிறாள்.

  இந்த பக்கம் மீனாட்சிக்கு வீடு கைய விட்டு போய்விடுமோ என்கிற கவலை, ஊர் பெரியவர்கள் வர சக்திக்கு தெரியாமல் மீனாட்சி போய் பேச பஞ்சாயத்துல எந்த உதவினாலும் கேளுங்க என கூறுகின்றனர். இந்த நேரத்தில் சக்தி வெளியே வர மீனாட்சி பொய் சொல்லி சமாளிக்கிறாள்.

  Also read... விஜய் ஆக்டிங்! வாரிசு பட ஷூட்டிங்! சர்ப்ரைஸ் விசிட் அடித்த ஷாருக்கான்!

  அடுத்து சக்தியை டைலர் மிஷின் வாங்க சென்னை போக சொல்ல முதலில் மறுக்கும் சக்தி பின்பு சரி என ஒத்து கொண்டு கிளம்ப மீனாட்சியிடம் யமுனா நாளைக்கு பஞ்சாயத்துல பணம் வங்கலனு சொல்லிடலாம் என கூறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? பஞ்சாயத்தில் எடுக்கப்படும் முடிவு என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv