ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சக்திக்கு தெரிய வந்த புஷ்பாவின் சூழ்ச்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

சக்திக்கு தெரிய வந்த புஷ்பாவின் சூழ்ச்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

சக்திக்கு தெரிய வந்த புஷ்பாவின் சூழ்ச்சி, பரபரப்பான கட்டத்தை நோக்கி செல்லும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் சக்தியிடம் சாந்தா இப்போ அந்த வட்டி இரங்கநாயகி மகன் எந்த பிரச்சனையும் பண்றது இல்லமா என சொல்ல சக்தி ஏற்கனவே பண்ண பிரச்சினைக்குதான் இந்த கம்ப்ளைன்ட் என கூறுகிறாள்.

    வெற்றி தன் தங்கையோடு அமர்ந்திருக்க சக்தி போன் செய்து உங்க அண்ணனுக்கும் உனக்கும் பழக்கம் எப்படி என விசாரிக்க அவள் பொய்யாக அந்த அளவுக்கு ரிலேஷன்ஷிப் இல்லை என்றதும் சக்தி மகிழ்ச்சியாகி கம்ப்ளைன்ட் விசயத்தை சொல்கிறாள்.

    இந்த பக்கம் இரங்கநாயகி கடுமையான கோபத்தில் கான்ஸ்டபிளிடம் விசாரிக்க அவர் கம்ப்ளைன்ட் காப்பி மிஸ் ஆயிடுச்சு என்றதும் இரங்கநாயகி டென்ஷன் ஆகிறாள். கிரிவலத்துக்கு போன் செய்த இன்னொரு கான்ஸ்டபிள் நமக்கு இனி பிரச்சினை இல்லை கம்ப்ளைன்ட் காப்பிய தூக்கிட்டேன் என சொல்ல இந்த தகவலை கேட்டு வெற்றி சந்தோஷப்படுகிறான்.

    Also read... இந்தியில் களைகட்டும் கடவுள் பட வியாபாரம்

    இரங்கநாயகி அம்மா வெறியில் இருக்க புஷ்பா ஒரு தூக்கு கயிறை நீதிமணியின் கழுத்தில் மாட்டி உனக்கு ஆம்பளை புள்ளை பெத்த நான் முக்கியமா இல்லை பொம்பளை புள்ளை பெத்த அவ முக்கியமா என மிரட்டுகிறாள்.

    சக்தி பீரோவில் பத்திரத்தை பார்த்து அம்மாவிடம் சண்டை போட யமுனா நான் தான் வைத்தேன் நீதிமணி அப்பா தான் கையெழுத்து கேட்டார் என உண்மையை சொல்ல, சக்தி கோபப்பட்டு இனியும் இதை கேக்காம விடமாட்டேன், என யமுனாவை இழுத்து கொண்டு செல்கிறாள். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv