ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பூஜாவுக்கு ஓகே சொன்ன வெற்றி... மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

பூஜாவுக்கு ஓகே சொன்ன வெற்றி... மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

பூஜாவுக்கு ஓகே சொன்ன வெற்றி, சக்தியை பார்க்க வந்த மாப்பிள்ளையை அடித்து விரட்டிய மீனாட்சி, நடந்தது என்ன? மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் மீனாட்சியும் யமுனாவும் கார்த்திக்கின் அம்மா போட்ட கண்டிஷனை ஒத்துக் கொள்ள மறுக்கின்றனர்.

    சக்தி இந்த கல்யாணத்தை நடத்துவேன் என சொல்ல இந்த பக்கம் பீல் பண்ணும் வெற்றியை சரண்யா சமாதானப் படுத்தும்போது ரங்கநாயகி கூப்பிடுகிறாள். பூஜாவுடன் நிச்சயம் பண்ண வெற்றி ரங்கநாயகியிடம் சம்மதம் தெரிவிக்கிறான்.

    அடுத்து மீனாட்சி சாமியிடம் வேண்டும்போது ஜோசியர் போன் பண்ணி சக்திக்கு ஒரு மாப்பிள்ளை இருக்கிறது என்று மீனாட்சியிடம் சொல்லுவது மட்டுமல்லாமல் பிறகு, ஜோசியர் வீட்டுக்கு வருகிறார். இப்பொழுதே நிச்சயதார்த்தம் வச்சிக்கலாம். சக்தி ஜாதகத்தில் கல்யாண யோகம் வந்துவிட்டது என ஜோசியர் சொல்கிறார்,

    ஆனால் மீனாட்சி யமுனாவுக்கு கல்யாணம் முடிந்த பிறகுதான் சக்தி கல்யாணம் என ஜோசியருக்கு சொல்ல, அந்த நேரத்தில் மாப்பிள்ளையின் தாயும் தந்தையும் சக்தியை பொண்ணு பார்க்க வருகின்றனர், மாப்பிள்ளை தாமதமாக வருகிறார்.

    Also read... சத்யராஜை மாஸ் ஹீரோவாக்கிய மம்முட்டியின் மலையாள படம் வார்த்தா

    அடுத்து பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை சக்தியை பத்தி வழியில் தவறான விஷயங்களை கேள்விப்பட்டேன். அவளைப் பற்றி தப்பாக பேச, இதை பார்த்த மீனாட்சி கோவமாக மாப்பிள்ளையை அறைந்து அவர்களை விரட்டுகிறாள். அடுத்து நடக்கப் போவது என்ன வெற்றி சக்தி ஒன்று சேர்வார்களா என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv